14 Jan 2024

தமிழரசுக் கட்சின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது – முன்னாள் எம்.பி சிறிநேசன் விளக்கம்.

SHARE

தமிழரசுக் கட்சின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுமுன்னாள் எம்.பி சிறிநேசன் விளக்கம்.

தமிழரசுக் கட்சின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போட்டிக்களமாக இந்த உள்ளக விடையத்தை மாற்றிவிடாமல் விட்டுக்கொடுப்புடன் ஏகமனதாக ஒரு தலைவரைத் தெரிவு செய்கின்ற பாரம்பரியத்தைப் பின்பற்றுமாறு  இவ்விடையம் குறித்து எமது கட்சியின் மூத்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ளார். இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் அவர்கள் ஒருநாள் அவகாசத்தைக் கேட்டிருப்பதாக நான் அறிகின்றேன். அதன் பின்னர் ஒரு ஜனநாயக ரீதியாக போட்டியின் அடிப்படையில் யார் தலைவர் என்பதை தெரிந்து கொள்வதற்காக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(14.01.2024) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தற்போது பிரதேசக் கிளை உறுப்பினர்கள் வாக்களிப்பதனுடாக  அதிகளவு வாக்குகளைப் பெறுகின்றவர்கள்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராக வரமுடியும் என முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி அதற்கான முடிவு ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்படும் என் நான் நம்புகின்றேன். எனவே தமிழ் தேசியம் சார்ந்து எமது முடிவுகளை நாங்கள் எடுப்பது மிகவும் பொருத்தமாக அமையும் என நான் நினைக்கின்றேன். என தெரிவித்த அவர்.

கட்சியின் தலைவர் பதவிக்காகத்தான் போட்டி நிலவுகின்றது மாறாக செயலாளர் பதவிக்கான போட்டிகள், நிலவுவதாக எனக்குத் தெரியவில்லை. வடக்கிற்கு தலைவர் பதவி கொடுத்தால் கிழக்கிற்கு செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனும் ஓர் தார்மீக சிந்தனை காணப்படுகின்றது.

எனவே கிழக்கிற்கு அந்த செயலாளர் பதவி கிடைக்கும் என நான் நினைக்கின்றேன். பொருத்தமானவர்களுக்கு அந்த பதவி வந்து சேருமாக இருந்தால் தமிழரசுக் கட்சியை சரியான திசையில் நகர்த்திக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும் என நான் நம்புகின்றேன் என அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: