11 May 2023

பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி வழங்கி வைப்பு.

SHARE

பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திற்குபட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி  புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும், மட்.பட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் எம்.ஆர்.பி. பாம் கவுஸ் அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சியை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையைச் சேர்ந்த சிரேஸ்ட முதலுதவிப் போதனாசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.

வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஏனை பொது நிகழ்வுகளிலும், ஏற்படுகின்ற அசப்பாவிதங்களில் ஏற்படும், காயங்கள், உள்ளிட்டவற்றைக் கையாளும் முறைகள். மயக்கம், அதிர்ச்சி, காய்ச்சல், உள்ளிட்ட பல அடிப்படை விடையங்களுக்கு எவ்வாறு முதலுதவிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும், இதன்போது மிகவும் விபரமாக முதவுதவிப் போதனாசிரியர்களால் மாணவர்க்கு எடுத்தியம்பி வைக்கப்பட்டன. இது கிராமமட்டத்திலிருந்து அப்பகுதி பாடசாலையில் பயிலுகின்ற மாணவர்களுக்கு மிகுந்த  பிரயோசனமாக அமைந்ததாகவும், இதற்கு நிதி உதவி வழங்கிய எம்.ஆர்பி.பாம்கவுஸ் நிறுவனத்திற்கும், பயிற்சியை வழங்கிய இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இதன்போது போரதீவுப் பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி அருள்ராசா தெரிவித்தார்.

யானைகள் வழும் எல்லைப் புறங்களிலும், வைத்திய வசதியின்றி வசிக்கும் எமக்கு தற்போது இரண்டு நாட்களும் வழங்கப்பட்ட முதலுதவிப் பயிற்சி மிக மிக இன்றியமையாததாக அமைந்திருந்ததாக இதன்போது கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

























 

SHARE

Author: verified_user

0 Comments: