மின்சாரம் வழங்குமாறு
மின்சார சபை அலுவலகத்திற்கு முன்னால் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்.
மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. உடனடியாக மின்சாரம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராம மக்கள் திங்கட்கிழமை (15) காத்தான்குடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளி இடங்களிலிருந்து
குடியேறிய மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராமத்தில் சுமார்
50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் மின்சாரம்
பெறுவதற்கென விண்ணப்பித்து ஒரு வருடகாலமாகியும் இதுவரை மின்னிணைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
இக்கிராமத்தில் மின்சாரமின்மையால் மாணவர்கள் கல்வி கற்கமுடியாமலும் பொதுமக்கள் பாம்புத்
தொல்லைகளினால் பெரும் அவலங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக காத்தான்குடி
பிரதேச மின் அத்தியட்சகர் கனகசபை சிவேந்திரனிடம் கேட்டபோது-குறித்த கிராமத்திற்கு மின்னிணைப்பை
ஏற்படுத்து சுமார் 20 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். இதறகான நிதி இலங்கை மின்சார சபையிடம்
இல்லை. நிதி கிடைத்தவுடன் குறித்த பணியினை நிறைவு செய்யலாம் எனத் தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment