6 Nov 2022

கித்துள் ஸ்ரீ சன்னியாசி மலை சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு.

SHARE

வரலாற்று சிறப்பு பெற்றதும் சன்னியாசிகள் தரிசித்த சிவன் ஆலயமாக விளங்கும் கித்துள் ஸ்ரீ சன்னியாசி மலை சிவன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேக குடமுழுக்கு.

ஆலய தர்மகர்த்தாவும் ஆலய பூசகருமாகிய  செல்லையா தம்பிராசாவினால் உருவாக்கம்பெற்ற  கித்துள் ஸ்ரீ சன்னியாசி மலை அடிவாரத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானுக்குரிய  எண்ணைக்காப்பு வியாழக்கிழமை இடம் பெற்றது.

வெள்ளிக்கிழமை ஸ்ரீ சன்னியாசி மலையில் அமைந்துள்ள எம்பெருமான் லிங்கேஸ்வரருக்கு சுப வேளையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெற்றது. மகா கும்பாபிஷேக பிரதிஷ்டா  குரு சிவஸ்ரீ சு.கு சுப்பிரமணிய விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது

குடமுழுக்கு பெருவிழாவில் பிரதான  யாகசாலையில்  பூசைகள்  விசேட பூஜை நடைபெற்றதும் கும்பங்கள் எழுந்தருள பெற்று மேளதாள வாத்தியம் பக்தர்களின் சிவசிவா அரோகரா கோஷத்துடன் கலச கும்பங்களுக்குரிய குடமுழுக்கு நடைபெற்றது.

அதன் பின்னர் ஸ்ரீ சன்னியாசி மலை சிவன் ஆலயத்தில் எழுந்தருளப்பட்டிருக்கும் மூலமூர்த்தி சிவலிங்கேஸ்வரருக்கு குடமுழுக்குக்கான பிரதான கும்பம் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஆலய உள்வீதி வலம்வந்ததும் லிங்கேஸ்வரப் பெருமானுக்கு சிவசிவா  போற்றி சிவ சிவ சிவசிவா போற்றி கோசத்துடன் குடமுழுக்கு இடம்பெற்று நிறைவு பெற்றது.

மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்ட குருமார்கள் ஆலய அறங்காவலர் சபையினரால் கௌரவிக்கப்பட்டதுடன் மகா கும்பாபிஷேக பெரு விழாவில்  கலந்து கொண்ட அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு மற்றும் மகா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நடைபெற்ற பூசைகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: