அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவி சாதனை.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் குறுநாடக ஆக்கம் பிரிவு -4 இல் செல்வி.உதயகுமார் சனாதனி முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் எமது பிரதேசத்துக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார். இவரை பயிற்றுவித்த மாணவியின் தந்தையும் ஆசிரியருமான க.உதயகுமார் அவர்களுக்கும் ஊக்குவித்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் களுதாவளை சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment