இலங்கைக்கு இந்தியா நிபந்தனை வித்தித்துத்தான் உதவி செய்யவேண்டும் - சிவசக்தி ஆனந்தன்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டக வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும், இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு 4 பில்லியன் நிதி உதவி செய்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும்,
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு ஞயிற்றுக்கிழமை(16) மாலை மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
எமது கட்சியிலிருந்து தோழர்களின் இழப்பானது எமது கட்சிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாத்திரமின்றி முழு தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகும். தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும்தான் எமது வீரர்கள் போராடச் சென்றார்கள். அவர்கள் சகோதரப் படுகொலைகள் மூலமும், இலங்கை அரசாங்காத்தின் மூலமும்தான் அவர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 40 வருடங்களைக் கடந்தும் தமிழ் மக்கள் நிம்மதியையோ, சமாதானத்தையோ இதுவரையில் எட்ட முடியாத நிலமையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி தமிழ் மக்க்ள மத்தியில் காணப்படும் கட்சிகளும், சிதறி சின்னா பின்னமாக்கப்பட்டிருக்கின்ற நிலமையில்தான் நாம் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றோம். இது எமக்கு ஒது துரதிஸ்ட்டவசமாகும்.
எதிர்காலத்திலாவது உயிர்நீத்த தோழர்கள், போராளிகள், மற்றும் பொதுமக்களின் கனவுகள், நிறைவேற வேண்டுமாக இருந்தால், இந்த மண்ணிலே தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும், போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களைக் கருத்திற் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும். அதற்குரிய காலம் வந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.
அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்களும், தென்பகுதியிலே பல்வேறுபட்ட குழப்பங்களுடன் மிகவும் மோசமானதாகவும் இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டை கைவிடுவதாக இல்லை. ஐ.நா சபையிலே இருக்கின்ற போர்குற்றம், பொறுப்புக்கூறல் போன்ற விடைங்களை எப்படி நீத்துப் போகச் செய்யலாம், அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தையும், எவ்வாறு இல்லாமல் செய்யலாம், வல்லரசுகள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றபோது, அந்த வல்லரசுகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றபோது இந்த அரசாங்கம் நாட்டின் சில பகுதிகளை சில வல்லரசுகளுக்கு விட்டுக் கொடுப்பதனூடாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகளை நீத்துக்போகத்தான் செய்கின்றார்கள்.
குறிப்பாக எங்களது கட்சியினால் கொண்டு வரப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கம்கூட எதிர்காலத்தில் எமது கையைவிட்டு நழுவிப்போகும் நிலமைதான் உள்ளது. அதற்கான பேரம்பேசல்கள், அதற்காக வல்லரசுகளுக்கு சில இடங்களை தாரைவார்த்துக் கொடுத்து தமிழர்களுக்கு அதனை இல்லாமல் செய்யும், வேலைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தமக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டக வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும், இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு 4 பில்லியன் நிதி உதவி செய்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கவேண்டும், என்பதை இந்திய அரசுக்கு தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் மாகாண சபை முறைமையும் கைநழுவிப்போகும். யுத்தம் நடைபெற்று முடிந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும், ஐ.நா மனித உரிமை பேரவையிலும்கூட போர்குற்றம், என்பன கைநழுவிப்போகின்ற நிலமை இருக்கின்றது.
எனவே நாம் அளப்பெரிய தியாகங்களை இந்த மண்ணிலே செய்திருக்கின்றோம். எமது கட்சியில்மாத்திரம் சுமார் 3000 இற்கு மேற்பட்ட தோழர்கள் உயிர் நீர்த்துள்ளார்கள். அதிகளவு போராளிகள், 150000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், பில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன, இவைகளையெல்லம் கருத்திற்கொண்டு, தமிழ் கட்சிககள் புத்திசாலித்தனமாக, ராஜதந்திர ரீதியாக, அறிவுபூர்வமதாகச் சிந்தித்து, பூகேள ரீதியான அரசியலையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய காலம் நெருகி வந்துள்ளது. அதற்காக வெகுவிரைவிலே தமிழ் கட்சிகளுக்கிடையே ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எனவே மக்களுடைய துயரங்களைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டுமம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கட்சியின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அருண் தம்பிமுத்து, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்த கொண்டிருந்தனர். அக்கட்சியின் தலைவரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டதுடன், கட்சியிலிருந்து அப்பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டதுடன் கட்சிக்காக பாடுபட்டவர்கள் பொன்னாடை போரத்தி, கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment