23 Mar 2022

281இற்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போகும் நிலமையில் உள்ளது – பிரசாந்தன்.

SHARE

281இற்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போகும் நிலமையில் உள்ளதுபிரசாந்தன்.

வாகரைப் பிரதேசத்தில் 82 குளங்கள் அமைந்துள்ளன அதில் 40 குளங்கள் பயன்பாட்டிலும், 42 குளங்கள் தூர்ந்துபோயும் உள்ளன. அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 281இற்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போகும் நிலமையில் உள்ளன. இவ்வாறான குளங்களைப் புனரமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மவாட்டத்தின் நிலக் கீழ் நீரைச் சேமித்து, நீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம். எனினும், கொரோனா, பொருளாதார நெருக்கடி, உக்ரேன் மோதல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். 

கொக்ககோலா பவுண்டேனின் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வீ எபெக்ட் நிறுவனம் மற்றும் அகம் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வாகரைப் பகுதியில் புரனரமைக்கப்படவுள்ள 3 குளங்களின் புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு செவ்வாய்கிழமை(22) வாகரை பனிச்சங்கேணியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் .கருணாகரன்,   வீஎபெக்ட் நிறுவனத்தின் சுவீடனின் பிராந்திய பணிப்பாளரான நீனா லாறியா, வகரைப் பிரதேச செயலாளர் ஜி.அருணன், கொக்கோலா பவுண்டேசனின் இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி லக்ஸ்மன் மதுரசிங்க, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் .எல்.எம்.அஸ்மி, கமநல அபிவிருத்தி திணைக்களப் பிரதி ஆணையாளர் ஜெகநாத்வீஎபெக்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் மயூரன்,மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

எவ்வாறுதான் திட்டங்கள் மக்கள் மத்தியில் நடைமுறைப் படுத்தினாலும், அதனைத் திட்டமிடுபவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும், வலுவாக்கத்தையும் நோக்கித் திட்டமிடுகின்றபோம் அதனைப் பயன்படுத்திகின்ற பயனாளிகளின் பங்களிப்பு பூரணமாக இருக்கின்ற போதுதான் அத்திட்டத்தை வெற்றிகொள்ள முடியும்.

தற்போத நாடு எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடி என அனைத்து விடையங்களிலும், கிழக்கு மாகாணம் குறிப்பிட்டளவு செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்பது எமது தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

வவாகரைப் பிரதேசத்தில் 82 குளங்கள் அமைந்துள்ளன அதில் 40 குளங்கள் பயன்பாட்டிலும், 42 குளங்கள் தூர்ந்துபோயும் உள்ளன. அதபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 281இற்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போகும் நிலமையில் உள்ளன. இவ்வாறான குளங்களைப் புனரமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மவாட்டத்தின் நிலக் கீழ் நீ ரைச் சேமித்துநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம்எனினும்கொரோனாபொருளாதார நெருக்கடிஉக்ரேன் மோதல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்இது எமது மாட்டத்திற்கு மாத்திரமான பிரச்சனையில்லைவடக்கு கிழக்கு மக்கள் கடந்த காலத்தில் சூறாவெளியுத்தம்சுனாமிஉள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வெளியில் வந்திருக்கின்றார்கள்.

ஓவ்வொரு பிரச்சனைகளும் ஏற்படுகின்ற போதுதான் அதற்கான தயார்படுத்தல்களும் அதிகரிக்கப்படல் வேண்டும்மட்டக்களப்பு பிரதேசத்தில் தேசையான நிலவளமும்நீர்வளமும் இருக்கின்றதுகுறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் அதிக வளங்களைக் கொண்டு காணப்படுகின்றதுநாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் அதிக விவசாய உற்பத்தியை ஈட்டுவதங்குப் பாடுபடல் வேண்டும்அதற்காக இவ்வாறன திட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்தல் வேண்டும்என அவர் இதன்போது தெரிவித்தார்.  












                                               

SHARE

Author: verified_user

0 Comments: