23 Mar 2022

உலக நீர் தினத்தையொட்டி வாகரையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் குளங்கள் புனரமைப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு.

SHARE

உலக  நீர் தினத்தையொட்டி வாகரையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் குளங்கள் புனரமைப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு.

உலக  நீர் தினத்தையொட்டி மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்யும் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் நிகழ்வு வாகரை பாவக்கொடிச்சேனையில் செவ்வாய்க்கிழமை 22.03.2022 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் - பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம்  ஆகிய மூன்று குளங்கள் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

'பெண்கள், குழந்தைகள் உட்பட 1.772 வறுமைக்குட்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு அவர்களது மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்வதும் 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதும் இதன்  பிரதான நோக்கங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (NINA LARREA) நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் நைனா லர்ரீPயா (NNயு டுயுசுசுநுயு) அதன் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன்  கொகாகோலா பவுண்டேஷன் அமைப்பின் இலங்கை மாலைதீவு பிராந்திய இணைப்பாளர் லக்ஷான் மதுரசிங்ஹ மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கமத்தொழில் சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர்,;  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் சார்பில் ரீ.எம்.வீ.பி. கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் படையினர் பொலிஸார் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் நைனா லர்ரீPயா

கோவிட் தொற்றுநோய் மக்களின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது..

இப்போது இறுதியாக அந்தப் பாதிப்புக்களிலிருந்து வெளியேறி வருகிறோம் ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் பல உயிர்களை பாதிக்கும் மற்றொரு பொருளாதார நெருக்கடியை நாம் இப்போது சந்திக்க வேண்டியுள்ளது. வறுமையும் பசி பட்டினியும் நமக்கு வெகு தூரத்தில் இல்லை. அதிலிருந்தும் நாம் மீள வேண்டும்.

குறிப்பாக கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சக்தியை வலுப்படுத்துவதன் மூலமே இந்தச் சாதனையை அடைந்து கொள்ள முடியும்.

அதனால்தான் எங்கள் வளர்ச்சித் திட்டத்தில் பெண்களை மையமாக வைத்துள்ளோம்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்து பெண்களில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உருவாக்க முடியும்.

பெண்களுக்கு நிலம்கல்விபயிற்சிநிதி சேவைகள் மற்றும் பலம் கிடைக்கும்போது பொருளாதார ரீதியில் முழு சமூகமும் பயனடைகிறது.

எங்கள் அனுபவத்தில் நிலையான விவசாயமே மிகவும் பயனுள்ள வழி என்பது தெளிவாகிறது.

கிராமப்புறங்களின் மறுமலர்ச்சிக்கு ஆதரவளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாம் கூட்டுறவுத்துறையின் அனுசரணையையும் பெற்று வருகின்றோம்.” என்றார்.


 















SHARE

Author: verified_user

0 Comments: