5 Aug 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மா வகைகளுக்குத் தட்டுப்பாடு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மா வகைகளுக்குத் தட்டுப்பாடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சிறிய அளவில் இருந்து வந்த பால்மாவுக்கான தட்டுப்பாடு இப்பொதுழு முற்றுமுழுதான தட்டுப்பாட்டு நிலைமைக்கு வந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்திலுள்ள மொத்த வியாபார நிலையங்கள் பல்பொருள் அங்காடிகள் சிறிய கடைகள் உட்பட அனைத்து வியாபார நிலையங்களிலும் முழு ஆடைப்பால் மா வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனினும் ஒரு சில வர்த்தக நிலையங்களில் பால் மா தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளான யோகட் தேயிலை வாங்கினால் அந்த நிறுவனங்ளின் பால்மா வகைகளை வாங்கக் கூடியதாக உள்ளது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதை அறிந்த வசதிபடைத்தவர்கள் மொத்த விற்பனைக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும்  இருந்த முழு ஆடைப்பால் மா வகைகளை மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கொழும்பிலிருந்து பால் மா விநியோகிக்கும் கம்பனிகள் பால்மா வரவில்லை எனத் தெரிவித்து பால்மா விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் சில நிபந்தனைகளுடன் சில பால்மாக்களை விநியோகிப்பதாக அந்த கம்பனிகள் வர்த்தகர்களிடம் தெரிவித்திருந்தபோதும் தாம்  அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பால் மா விநியோகிக்கும் ஒரு சில கம்பனிகள்  தமது வேறு தயாரிப்புக்களையும் பால்மாவுடன் சேர்த்து விற்குமாறும் அதன்போதே பால் மாவை வழங்குமாறும் கேட்டுள்ளன என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பால் மா விநியோகிக்கும் கம்பனியின் யோகட் தேயிலை போன்றவற்றை வாங்கினால் கூடவே பால் மாவை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் பால் மாவை வாங்கிப் பருக முடியாது பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதேவேளை எரி வாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்பதனால் எரிவாயு சிலிண்டர்களைக்  கொள்வனவு செய்வதிலும் நுகர்வோர் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: