17 Apr 2021

நடிகர் விவேக் உயிரிழந்தார்.

SHARE

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது - பார்த்திபன்.

நடிகர் விவேக் மறைவு செய்தியை கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் விவேக் - ரவீக்குமார் எம்.பி.,

திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மயில்சாமி, ஆனந்த்ராஜ், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

SHARE

Author: verified_user

0 Comments: