17 Apr 2021

புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மட்டு.மாவட்ட நிகழ்வு.

SHARE

புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மட்டு.மாவட்ட நிகழ்வு.

மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புத்தாண்டில் சம்பிராத முறைப்படி தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மங்களாராம ரஜமகா விகாரையில் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு சனிக்கிழமை (17) இடம்பெற்றது.

விகாரதாதிபதியும் கிழக்கு மாகாண பிரதி  பிரதம சங்கநாயக்கருமான அம்பட்டியே சுமணரத்ன தேரரின் வழிகாட்டலில்  தலைக்கு  எண்ணெய் தேய்க்கும் நிகழ்வுகள் விகாரையின் தேரர்களால்  முன்னெடுக்ககப்பட்டது.

கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணி பௌத்த மக்கள் இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பங்கு கொண்டனர். கொரோனா தொற்று  அச்சம் காரணமாக குறிப்பிட்ட தொகையினரே எண்ணெய் தேய்க்கும் வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: