25 Feb 2021

மாணவர்களின் கற்றலுக்குரிய செலவுகளைப் பொறுப்பேற்றும் நிகழ்வு.

SHARE

மாணவர்களின் கற்றலுக்குரிய செலவுகளைப் பொறுப்பேற்றும் நிகழ்வு.

விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் மாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு மற்றும் ஆண்டாங்குளம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் இருந்து மட்.ககு.கட்டுமுறிவு .. பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில்  மிகவும் வறிய நிலையில் தாய் தந்தையை இழந்த மாணவர்களின் கற்றலுக்கு உரிய செலவுகளைப் பொறுப்பேற்கும் திட்டத்தின் ஒரு பகுதி புதன்கிழமை(24) பாடசாலை அதிபர் எஸ்.ஜீவநேசன்  தலைமையில் மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்ட  மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்கள்  .பொ. சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவத்த பாடசாலை அதிபர். நூன் இராமகிருஸ்ண மிஸனில் இருந்து கல்விகற்றேன். இந்த பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் பல திறமைமிக்க மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களை சிறந்த முறையில் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சிறப்பாக கல்வி கற்பார்கள். அத்தோடு ஏனைய கலை, விளையாட்டுத் துறையில் ஆர்வமிக்கவர்கள் மாணவர்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதன்போது ஆத்மீக உரையாற்றிய சுவாமிஜி அவர்கள்இவ்வாறான எல்லைக் கிராமங்களில் உள்ள மக்கள் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர் என அறிய முடிகின்றது. இம் மாணவர்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு இனி வருடா வருடம் அனைத்து மாணவர்களிற்கும் அப்பியாச புத்தகங்கள் வழங்கவுள்ளோம். தரம் 6 மாணவர்களில் சிலரை இராமகிருஸ்ண ஆச்சிரமத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளோம். மேலும் இங்குள்ள குடும்பங்களிற்கு உதவக்கூடிய வழி வகைகளை ஆராய்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட விவேகானந்தர் சமுதாய நிறுவக நிறைவேற்று பணிப்பாளர் .பிரதீஸ்வரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் 2 நாள் தங்கியிருந்து இந்த பாடசாலை சமூகத்தின் மற்றும் மாணவர்களின் நிலமைகளை கண்டறிந்தேன். அதன் அடிப்படையில் இம்மாணவர்களில் தாய், தந்தையை இழந்த அல்லது மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களை பொறுப்பெடுக்கும் திட்டத்தினை கனடாவிலிருந்து தொடர்ச்சியான உதவியினை எமது நிறுவகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் .ஏகாம்பரம் அவர்களிடம் தெரிவித்த போது உடனடியாகவே 11 மாணவர்களையும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பொறுப்பெடுத்துள்ளார். அவர்களுக்கு, ஏனைய உதவிகளையும் செய்யவுள்ளோம். அத்தோடு அதிபர் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க தரம் 9 இல் இருந்து 11 வரையான மாணவர்களிற்கு மாலை கற்றலை மேற்கொள்வதற்கான அவர்களிற்கு மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான நன்கொடையாளர்கள் தயாராக இருந்கின்றனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.






















SHARE

Author: verified_user

0 Comments: