முனைக்காட்டில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.
தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முனைக்காடு மேற்கு, மற்றும் முனைக்காடு வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் 51 குடும்பங்களுக்குரிய வாழ்வாதாத உதவித் திட்டம் மட்டக்களப்பிலிருத இயங்கிவரும் பாம் பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வியாழக்கிமை(25) வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பாம் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் ரமேஸ் ஆனந்தன், வாழ்வாதார திட்டத்தின் முகாமையாளர் திருமதி பிரியதர்சினி சந்திரலிங்கம் மற்றும் திட்ட இலகுபடுத்துனர் திருமதி பத்மசுந்தரி சந்திரகுமார், என பலரும் கலந்து கொண்டு கயனாளிகளுக்குரிய வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.
பாம்பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல அவர்களின் முயற்சியில் பாம் பவுண்டேசன் நெதர்லாந்தின் நிதி உதவியுடன் இந்த வாழ்வாதார திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வறுமையிலும் வறுமையான அதிக அங்கத்தவர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம் குடும்பங்கள் எனும் அடிப்படையில் அப்பகுதியிலிருந்து 51 குடும்பங்கள் இதன்போது தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment