24 Feb 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் மற்றும் நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான விசேட கூட்டம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் மற்றும் நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான விசேட கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தனால் மட்டக்களப்பு மாவட்டத்தில இறால் மற்றும் நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான விசேட கூட்டம். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் செவ்வாய்கிழமை(23) நடைபெற்றது.

இக் கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் இறால் மற்றும் நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதன் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வருமனத்தை அதிகரிப்பது தொடர்பான பல தீர்மானங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைதலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தனினால் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டங்களுக்கான முதலீட்டாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் இனங்கண்டு அவர்களுக்கான சரியான பயிற்சிகள் ஆலோசனைகள் மற்றும் தேவையான கடன் வசதிகளை ஒழுங்கு செய்து கொடுப்பதன் மூலமாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலமாகவும் நவீன தொழில்நுட்பங்களை இறால் மற்றும் நண்டு வளங்களை புகுத்துவதன் மூலமாகவும் உற்ப்பத்திகளை அதிகரித்து அவற்றை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியும் எனபதனையும், இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருமானத்தை அதிகரித்து இதனை நம்பி வாழக்கூடிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தமுடியும். என்பதனையும் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.முகுந்தன் மேலதிக அரசாங்க அதிபர்(நிருவாகம்)திருமதி.ஸ்ரீகாந் சுதர்ஷினி பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் திட்டமிடல் அதிகாரிகள் என பல அரச உயர் அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: