23 Feb 2021

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு!

SHARE

மயிலத்தமடு - மாதவனை  மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு செவ்வாய்கிழமை(23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் மே மாதத்திற்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள் என அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருனாகரம்(ஜனா) ஆகியோரும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: