28 Dec 2020

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த போதும் அரசியல் கைதிகள் சிறைகளில்தானே இருந்தார்கள் அப்போது இவர்களை விடுவித்திருக்கலாம்?

SHARE
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த போதும் அரசியல் கைதிகள் சிறைகளில்தானே இருந்தார்கள் அப்போது இவர்களை விடுவித்திருக்கலாம்? ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த போதும் அரசியல் கைதிகள் சிறைகளில்தானே இருந்தார்கள் அப்போது இவர்களை விடுவித்திருக்கலாம்? நாங்கள் இந்த அரசாங்கத்தை நம்பினோம் அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் - வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு நாங்கள் இந்த அரசாங்கத்தை நம்பினோம் அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்களென. 

கூறி கடந்த 72 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கும் போது இறுதியாக கூறுவார்கள் நாங்கள் இனி சர்வதேசத்திடம் தான் போக வேண்டுமென்று இவ்வாறுதான் காலா காலமாக எமது மக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றார்களென மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி நாகதம்பிரான் கோயில் பிரதான வீதியானது ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (28) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார். இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாமனிக்கப்படவுள்ள கொங்கிறீட் வீதியின் ஆரம்ப நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர், மாவட்ட பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது வீதிக்கான பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்த இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் அங்கு மேலும் உரையாற்றுகையில்... உண்மையாகவே அரசாங்கம் தமிழ் தலைவர்களை ஏமாற்றவில்லை, தமிழ் தலைவர்களும் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை இரண்டு பேரும் சேர்ந்து அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள், இன்னும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

இது தெரியாமல் இன்னும் சிலர் அவர்களுக்குப் பின்னால் போய்க்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்பொழுது மக்களுக்குத் தெரியும் எதிர்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் போகின்றார்கள், மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் தொடர்பில் பேசுகின்றார்கள் ஆனால் இவர்கள் கடந்த காலங்களில் ஆளும் கட்சியில் இருந்த போதும் குறித்த 1000 ரூபாய் சம்பளம் தொடர்பில் பேசப்பட்டது, அப்போதே இவர்கள் தீர்வை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், அதே போன்று அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த போதும் அரசியல் கைதிகள் சிறைகளில்தானே இருந்தார்கள் அப்போது இவர்களை விடுவித்திருக்கலாம்? இவர்களின் நிலைப்பாடானது தமிழர்களுக்கு பிரச்சனை இருக்க வேண்டும் பிரச்சனை தீர்ந்தால் இவர்களுக்கு அரசியல் செய்ய முடியாது, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடாது அவர்கள் கைதிகளாகவே இருக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி நியாயம் கிடைக்கக் கூடாது இவர்கள் தங்களது பிள்ளைகளை நினைத்து வீதி வீதியாக அலைய வேண்டும், அப்படி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலைந்த தாய்மார்களில் சிலர் தற்போது இறந்து விட்டார்கள் ஆனால் தமிழ் தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இவ்வாறான மக்களுக்கு தீர்வு கிடைக்க கூடாது தீர்வுகள் கிடைத்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதே இவர்களது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. 

எங்களால் முடிந்ததை நாங்கள் எமது மக்களுக்காக செய்வோம், யாராக இருந்தாலும் தொடர்ச்சியாக எங்களுடைய மக்களை ஏமாற்ற முடியாது, எமது மக்களுக்கு இப்போது தேவை பிரச்சனையல்ல தீர்வுதான். மற்றய சமூகங்களுக்கு சமனாய் எமது மக்கள் வாழ வேண்டும். அந்த நிலையை உருவாக்க வேண்டும் அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும் அதற்கான முன்னெடுப்புக்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். 

எமது மக்களுக்கு நிறைய பிரச்சனையுள்ளது அவற்றிற்கான தீர்வினை இந்த அரசாங்கத்தின் ஊடாக நாங்கள் பெற்றுக்கொடுப்போம் அதனையே மக்கள் விரும்புகின்றார்கள், கடந்த காலங்களில் எம்மால் எதையும் செய்ய முடியாத நிலையிருந்தது ஆனால் தற்போது அப்படியல்ல எம்மால் பல்வேறு வேலைத் திட்டங்களை உங்களுக்காக செயற்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது இந்த வேலைத்திட்டம் மட்டுமல்ல மேலும் பல வேலைத்திட்டத்துடன் உங்களை நான் மீண்டும் சந்திப்பேன் என கூறியிருந்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: