மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஒரு சில தினங்களாக பெரியகல்லாறு கிராமத்தில் அக்கரைப்பற்றுடன் தொடர்புடைய ஒருவருடைய வீட்டில் 5 பேருக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டபோது தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஒரு சில தினங்களாக பெரியகல்லாறு கிராமத்தில் அக்கரைப்பற்றுடன் தொடர்புடைய ஒருவருடைய வீட்டில் 5 பேருக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டபோது தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீட்டில் இருவருமாக மொத்தமாக இதுவரையில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கலென இனங்கானப்பட்டுள்ளனர்.
இது தவிர நேற்றைய தினம் காத்தான்குடி பிரதேசத்தில் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலனியினை ஞாயிற்றுக்கிழமை (27) ஆந் திகதி அவசரமாக கூட்டியிருந்தது.
குறித்த பிரதேசங்களை எவ்வாறு கையாள்வது அல்லது தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பதா என்பவை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இதனடிப்படையில் சுகாதார துறையினர் திங்கட்கிழமை (28) கல்லாறு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் சுமார் 100 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் இந்தப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களுக்கு வரலாம் என்றும் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என்றும் இருப்பினும் பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் இதன்போது வழங்கியிருந்தோம்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை அழைத்து கிராமிய மட்டத்தில் உள்ள விழிப்புணர்வு குழுக்களின் ஊடாக இந்த தகவல்களை பரிமாறி பொதுமக்களின் நடமாட்டத்தை சுகாதார நடைமுறைகளை கைக்கொண்டு தங்களுடைய நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தவிர மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோன தொற்றினால் உயிரிழந்த இருவரது உடல்கள் தேங்கியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் இங்கு தெரிவித்திருந்ததாகவும், இது தொடர்பில் மேலும் கூறியதனடிப்படையில் இரு உடல்களில் ஒரு உடலின் உறவினர்கள் இருவர் அந்த உடலை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் சுற்றுநிருபத்தின்படி கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அந்த குடும்பத்தில் இருந்து இருவர் அல்லது ஒருவர் பார்வையிட்டதன் பின்புதான் தகனகிரியைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கினங்க, இருவர் வருகை தந்து பார்வையிட்டு சென்றுள்ள சடலத்தை தகனகிரியை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றய சடலத்தை தொடர்ந்து வைத்தியசாலை பிணவறையில் பேனுவதாகவும் குறிப்பிட்டார்.
சடலத்தை எரியூட்டுவதற்கான வசதி மட்டக்களப்பில் இல்லாதமையினால் அருகில் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலே குறித்த வசதி உள்ளது.
இதனடிப்படையில் அந்த உடலை தகனகிரியை மேற்கொள்வதற்காக பொலன்னறுவை மாவட்டத்தை தெரிவுசெய்திருப்பதாகவும் அங்கு இந்த உடலை அனுப்ப இருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment