27 Oct 2020

வெளி பிரதேச வியாபாரிகள் அனுமதியின்றி பிரதேசத்திற்குள் நுழைய தடை

SHARE


(படுவான் பாலகன்) 

வெளி பிரதேச வியாபாரிகள் அனுமதியின்றி பிரதேசத்திற்குள் நுழைய தடை.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குள் வெளி பிரதேசத்தினைச் சேர்ந்த வியாபாரிகள் அனுமதியின்றி உள்நுழைந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.


தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து இத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும், இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகளும் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

பொது இடங்களில் தொற்று நீக்கி திரவத்தினை விசுறுதல், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்லுதல், முகக்கவசம் அணிதலைக்கட்டாயமாக்கி கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு, பிரதேசத்தில் கிடைக்ககூடிய உள்ளுர் உணவுகளை உணவிற்காக அதிகம் பயன்படுத்துமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்வதுடன், இது தொடர்பான விழிப்பூட்டல்களை வழங்கி வருவதாகவும், குறித்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதோடு, குறித்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் சுகாதார திணைக்கள உத்தியோகர்த்தர்களுடன் இணைந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: