5 Nov 2019

சஜித் பிரேமதாஸ பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் - ரோசி சேனநாயக்க.

SHARE
சஜித் பிரேமதாஸ பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் - ரோசி சேனநாயக்க.
சஜித் பிரேமதாஸ அவர்கள் அவரது தேல்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களுக்கான 10 அம்சக் விடையங்களை முன் வைத்துள்ளார். அந்த 10 அம்சங்களும், வெறுமனே தேர்தலுக்கான முன் வைப்பு அல்ல அது இலங்கை நாட்டில் நிரந்தரமாக பேணப்படவேண்டிய விடையங்களாகும்.


என கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி சஜித் பிரேமதாவை ஆதரித்து, மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவில் சனிக்கிழமை (02) சஜித் பிரேமதாஸவின் ஜெனரேசன், எஸ்.பி.ஜி. இன் ஏற்பாட்டில் அவ்வமையின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் மகேந்திரன் ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மனைவி ஜலானி, மற்றும் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்கொண்டிருந்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ரோசி சேனநாயக்க…


பெண்களுக்கான சுயாதீனமான ஒரு ஆணைக்குழு அமைத்தல். அதனூடாக பாகுபாடின்றி  செயற்பாடுகளை முன்நெடுத்தல். தனியார் மற்றும் அரச அமைப்புக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுதல், பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இந்த ஆணைக்குழுவினூடாக தீர்வுகணுதல். சட்டம் மற்றும் நீதி விடையங்களில் அனைத்து விடையங்களிலும பெண்கள் சமமானதாக நடாத்தப்படுவதோடு, நிவாரணங்களைப் பெறுவதற்குரிய வழிமுறையை உருவாக்கி பெண்களது உரிமைகளைப் பாதுகாத்தல்.


சயாதீன சபைகள், மற்றும், தீர்ப்பாயங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.


போலிஸ், நிதித்துறை, சட்டசேவைகளுக்காக விடையங்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றங்களிலிருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். பெண்கள் சொன்னால்தான் அவர்களுக்கு மன்னிப்பும் வழங்கமுடியும். 

பெண்கள் எழிதில் அனுகக்கூடிய சட்டங்களை வைத்து, பெண்களுக்கு அநீதிவிழைவிக்கப்படுகின்ற நேரத்தில், இலவசமாக வாதிடுவதற்கு சட்டத்தரணிகள் வாதிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


பெண்களின் பொருளாதாரம், பெண்களின் வாழ்வாதாம், வேலைவாய்ப்பு, போன்ற விடையங்களில், எதிர்காலத்தில் பெண்களை முன்னுரரிமைப்படுத்தி அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல். 


சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், முறைசார தொழிலில் ஈடுபடும் பெய்களுக்கு, காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தி உதவிக்கரம் நீட்டவுள்ளோம். 


முன்பள்ளி தொடக்கம், அனைத்து கல்வி நடவடிக்கைகளிலும் பாலினை சமத்துவம் பேணப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறப்புத் தேற்சி பெரும் சிறுவர்களுக்கும், அதற்கேற்ப அர்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்படும். 


பேண்களுக்கு தொழிற்பயிற்சிகள் மேற்கொள்ளக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்திலும், மாகாணசபையிலும், உள்ளுராட்சி சபைகளிலும்,  பெண்களுக்கு  25 வீத இட ஒதுக்கீடு செய்யப்படும். 


எந்தவகையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளற்ற சமுதாயம் உருவாக்கப்படும், அதற்குரிய பாதுகாப்புக்கள் நாட்டில் ஏற்படுத்தப்படும். 


போரினால் கணவனை இழந்த குடும்பங்களுக்கும். மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், வீடமைப்பு, கடன்வசதி, வாழ்வாதாரம் போன்ற உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


தன்னிறைவான குடும்பங்களை உருவாக்கும் பொருட்டு சிறந்த சமுதாய நெறிமுறைகள் கட்டியெழுப்பப்படும். எனவே அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக்குவோம் என அவர் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: