29 Sept 2019

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அரசாங்க உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள்.மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அரசாங்க உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அரசாங்க உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள்.மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அரசாங்க உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள்.
அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அலுவலர்களுக்குப் பஞ்சமில்லை என மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மட்டக்கறளப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்வாண்மை உளநல ஆற்றுப்படுத்துநர்களுக்கான (டீநiபெ ய ளுமடைடநன ஊழரளெநடடழச”)  வதிவிடபவ் பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அமெரிக்க உலக யூத சேவைகள் நிறுவனத்தின் நிதி, ஆலோசனை, வழிகாட்டலில் இடம்பெறும் இப்பயிற்சி நெறி சனிக்கிழமை 28.09.2019 தன்னாமுனை மியானி பயிற்சிக் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்கறளப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுமாக சுமார் 30 பேர் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்றனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி கிழக்கு மாகாணத்திலே அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை இருந்தபோதிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அதிகப்படியான அரச உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள்.  

இதன் மறு கருத்து மட்டக்களப்பு மாவட்டத்திலே அரச உத்தியோக மனித வளம் போதியளவு உள்ளது என்பதாகும். இதனை இந்த மாவட்டத்தைக் மீள் கட்டியெழுப்பக் கூடிய ஒரு சாதகமான விடயமாகவும் பார்க்க முடியும்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த யுத்தம்,  இடைக்கிடையே எதிர்கொள்ளும் இயற்கை இடர்கள் இவற்றால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திக்க வேண்டியிருந்து.

எவ்வாறாயினும், இப்பொழுது யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து மக்கள் மீண்டெழுந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனிடையே மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தத் தறுவாயில் புதிய வடிவங்களிலே பல்வகைப் பாதிப்புக்கள் மக்களைச் சூழ்ந்துகொண்டுள்ளன.

புதிய கலாச்சாரங்கள் என்ற வடிவத்திலே பல அநாவசிய விடயங்கள் சமுதாயத்திற்குள் ஊடுருவி சமூகங்களின் கட்டுக்கோப்பைச் சீரழிக்கின்றன.

இதனால் இருக்கும் பிரச்சினைகளோடு இன்னுமின்னும் பிரச்சினைகள் கூடியிருக்கின்றன. அழிவுகளிலிருந்து அபிவிருத்தியை நோக்கி மீண்டெழும்போது இவை சவால்களாக அமைந்திருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடம் என்று குறிப்பிடுகின்றோம்.
அதேவேளை தற்கொலை செ4ய்து கொள்ளும் விடயத்திலும் இந்த மாவட்டம் முன்னணியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றதை நான் கவலையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஊழல் மோசடிகளிலும் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இந்த நிலைமை காணப்படுகின்றது.
இவ்வாறாக எதிர்மறையான சூழலில் இந்த மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களும் சமூக மட்டத்தில் களப்பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுமாகச் சேர்ந்து யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் சீரழிவான கலாச்சார ஊடுருவல்களினாலும் பாதிக்கப்பட்டுப்போய் இருக்கின்ற மட்டக்களப்பு சமுதாயத்தை மீண்டெழ வைக்க வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
ஒரு அரச உத்தியோகத்தர் தனது தொழிலை நேசிக்கின்றவாhகில் அவர் மக்களுக்கான சேவையை மன விருப்பத்தோடு செய்ய முன்வரவேண்டும்.

அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையை அர்ப்பணிப்போடு செய்ய முன்வராதவரை பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான விமோசனம் கிடைக்காமலே போய் விடலாம் என்பதை கவலையோடு தெரிவிக்க வேண்டியுள்ளது” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: