13 Oct 2018

நான் ஐக்கிய தேசியகட்சி அல்ல.ஆனால் ஐக்கிய தேசிய முன்ணணியில் இருக்கின்றேன்

SHARE

நல்லிணக்கம் சார் பொருளாதார வலுப்படுத்தல் மற்றும்,சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ தேசிய ஒருமைப்பாடு, நல்லிக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  வியாழக்கிழமை(11.10.2018) நடைபெற்றது.
இதற்குப்பின்னர்  மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பிற்பகல் 4.00 மணியளவில்  ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு பதிலளித்தார்.அதன் முழுவிபரம் பின்வருமாறு.

கேள்வி:-கிழக்கு மாகாணத்தில் தங்களின் அமைச்சின் நிதி எந்தளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

பதில்:-எவ்வளவு நிதி என்று சொல்ல முடியாது.கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எங்களின் பிரதியமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.ஆகவே சில ஒதுக்கீடுகள் தொடர்பான பணிகள் முழுமையடையாத காரணத்தினாலேயே அதை ஆய்வு செய்து அதன் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றோம்.இவ்வருடம் டிசம்பர் மாதம் 25 திகதிக்கு முன்பே எமது அமைச்சினால் ஒதுக்கப்பட்டநிதிக்கான வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவேண்டும்.அவ்வாறு முழுமையாக வேலைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது மீண்டும் திறைசேரிக்கு செல்லும் நிலையேற்படும்.திறைசேரிக்கு சென்றால் எங்களது அமைச்சுக்கு அவப்பெயர் ஏற்படும்.ஆகவேதான் முடிவடைவதற்கு வாய்ப்பில்லாத வேலைகளை நீங்கிவிட்டு வேறு ஒரு திட்டத்திற்கு அல்லது முடிவடையும் பணிக்கு எமது அமைச்சின் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.ஏன்னென்றால் புதிய நிதியானது அடுத்த வரவு செலவு திட்டத்தில் ஜனவரி மாதம் இடம்பெறும்.எமது அமைச்சிற்கு ஆகஸ்ட் மாதம்தான் நிதி வந்தது.எனவே கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நாங்கள் அதிரடியாக, அதிவேகமாக வடகிழக்கில் ஒதுக்கியுள்ளோம்.இன்னும் பல அமைச்சுக்கள் தங்களின் வேலைகளை முழுமையாக முடிக்கவில்லை.அதனால்தான் அவ் அமைச்சின் நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு சென்றிருப்பதை பார்த்திருக்கின்றோம்.ஆகவே என்னால் குறை சொல்ல முடியாது.அதனால்தான் நாங்கள் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து அதன் முன்னேற்றகரமான நிலைப்பாடு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.நேற்று வடக்கிற்கான ஆய்வுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டோம்.இன்று கிழக்கிற்கான ஆய்வுகளை
மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ளோம்.


கேள்வி:-இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரரீதியாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்:-இதனை ஐக்கிய தேசிய கட்சியுடன்தான் கேட்க வேண்டும்.

கேள்வி:-நீங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர் என்பதால் கூறமுடியுமா.?

பதில்:-நான் ஐக்கிய தேசியகட்சி அல்ல.ஆனால் ஐக்கிய தேசிய முன்ணணியில் இருக்கின்றேன்.உண்மையிலேயே காபந்து அரசாங்கம் எனும் சொல்லாடல் அடிக்கடி நாட்டில் உள்ள,வெளிநாட்டில் உள்ள அரசியல்வாதிகளினால் பேசப்படுகின்றது.காபந்து அரசு அரசாங்கம் அமைக்க உரிமை கிடையாது.மக்களின் ஆணையில்லை.காபந்து அரசு என்றாலே அது ஆபத்து என்று அர்த்தம் புலப்படும்.உண்மையிலே காபந்து எனும் நிலைப்பாட்டில்,வார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அமைச்சுப்பதவியை எடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் சரணாகதி அடைந்த கூட்டம் வட்டமாகும்.எஸ்.பீ.திசாநாயக்கா,டிலாண் பெரேரா,போன்றவர்கள்தான் காபந்து அரசு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.எஸ்.பீ.திசாநாயக்கா,டிலாண் பெரேராவுக்கு காபந்து அரசாங்கத்தை கதைப்பதற்கோ அல்லது உடைப்பதற்கோ எந்தவித மக்களின் ஆணையில்லை.இவர்கள் இருவருக்கும் பாராளுமன்றத்திலோ இருப்பதற்கு மக்கள் ஆணை கிடையாது கிடைக்கவும் மாட்டாது.இவர்கள் தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்கள்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தயவான புண்ணியத்தால் அமைச்சு பதவி ஏற்றவர்கள்.இவர்கள் தேசியபட்டியல் நியமனத்தின்மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள்.இவர்கள் அமைச்சர்களாக இருந்து எமது அரசாங்கத்தினை பாவப்படுத்தி கதைக்கும் அமைச்சர்களாகவும் செயற்பட்டார்கள்.இது எட்டாவது பாராளுமன்றமாகும்.இவர்கள் இருவராலும் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு வரமுடியாமற் போகும் நிலையேற்படும்.

கேள்வி:-இன்று வரவு செலவு திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க கூடாது.உண்மையிலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைத்தற்கு பிற்பாடுதான் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனும் நிலைப்பாடு தமிழ்மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாகவும்,கருத்தாகவும் உள்ளது.இவ்விடயமாக உங்கள் கருத்தென்ன?

பதில்:-இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம்தான் கேட்கலாம்என்னிடம் கேட்பது பிரயோசனம் இல்லை.

கேள்வி:-தமிழ்மக்களின் அரசியல்தீர்வு தொடர்பில் உறுதியான முடிவை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று தமிழ்மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.இன்று இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் எடுப்பதில் உங்கள் பதில் என்ன?

பதில்:-தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல.என்னிடமும் அவ்வாறான எண்ணமும் உள்ளது.உறுதியான,நம்பிக்கையான தீர்வுகளை இன்றும் பேசித்தீர்க்கவில்லை.ஆனால் கடந்த காலங்களில் இனப்பதற்றம் இருந்தது.இனப்பிரச்சனை இல்லை.ஆனால் தற்போது இனப்பதற்றம் இல்லாமல்போய் அல்லது குறைவடைந்து விட்டது.ஆனால் இனப்பிரச்சனை உள்ளது.ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றாலும் குறிப்பாக சகோதர முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் அம்பாறையிலும்,கண்டியிலும்,தெல்தோட்டையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றாலும் ஒட்டுமொத்தமாக இனப்பதற்றம் என்பது இல்லை.அது மனச்சாட்சியுள்ள எல்லோருக்கும் தெரியும்.

எனவே இனப்பதற்றம் இல்லாத சூழ்நிலையில் இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வு கிடைப்பதற்கு நாங்கள் ஐக்கியமாகவும்,சமாதானமாகவும் செயற்படவேண்டும்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் அரசியல்கட்சிக்கு அப்பால் சென்று தமிழ்மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்று கூடியுள்ளோம்.இதன்போது கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து "தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு" அல்லது தமிழ் காங்கிரஸ் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.பெருமளவானர்கள் ஆதரவு அளித்தார்கள்.ஆனால் அது நடைமுறையாக வில்லை.இவ்வாறுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மனநிலை உள்ளது.மனநிலை சரியாக இருக்க வேண்டும்.ஏன் நடைமுறையாகவில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள்.காலங்கள் இழுத்தடிக்கப்படுகின்றது.தமிழ்மக்கள் நிம்மதி பெருமூச்சை எப்போது சுவாசிக்கப் போகின்றார்கள்.

கேள்வி:- நாட்டில் நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்மக்களுக்குரிய அரசியல்தீர்வு வருமா என்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்:- அதற்கு பதில் சொல்ல முடியாது.அரசியல்தீர்வு கொண்டு வரும் வாய்ப்பு புதிய அரசியலமைப்பு விடயத்தில்தான் தங்கியுள்ளது.அரசியல்தீர்வு விடயத்தில் கடைசி ஒரு வருடங்களுக்குள்ளேயே நடைமுறையாகுமா? எனும் சந்தேகத்தில்தான் நானும் உள்ளேன்.அரசியல் தீர்வு விடயத்தில் நானும் பலமுறை கதைத்துள்ளேன்.உண்மையிலேயே அரசியல்தீர்வு வரும் நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.அரசியல்தீர்வு வரவேண்டும். தீர்வையும் எடுத்துக்கொண்டு புதிய அரசியலமைப்பும் வரவேண்டும்.ஆனால் சில காரியங்கள் புதிய அரசாங்கம் வந்தவுடனே செய்திருக்கவேண்டும்.அதனை முதல் வருடத்தில் செய்திருக்க வேண்டும்.முதலாவது,இரண்டாவது,மூன்றாவது வருடத்திலும் செய்யாமல் தற்போது நான்காவது வருடத்தில்  செய்யாமல் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதனால் தமிழர்களுக்குரிய அரசியல்தீர்வு துரதிர்ஸ்டவசமாகியுள்ளது.

கேள்வி:-அரசியல்கைதி தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- அரசியல்கைதி தொடர்பாக நாங்கள் தீர்வு நிலைப்பாட்டில் நகர்ந்து செல்வதற்காக எனது உள்ளுணர்வு செல்கின்றது.நாடு முழுவதும் கொந்தளிப்புக்கள்,அசாம்பாவிதங்கள்,இருக்கின்றது.ஆங்காங்கே அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டில்  மக்கள் போராடி வருகின்றார்கள்.வட,கிழக்கு உட்பட கொழும்பிலும் மக்கள் போராடுகின்றார்கள்.நாங்களும் ஆதரவு வழங்கின்றோம்.அரசாங்கத்தின் பங்காளி கட்சியென்றாலும் அரசியல்கைதி விடுதலை செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.

அரசாங்கம் என்பது பல கட்சிகளின் கூட்டாகும்.நாங்கள் சொல்வதையெல்லாம் அரசாங்கம் செய்யாது.ஏனைய கட்சிகளின் முடிவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்கு முடிவுகள் வேண்டும்.அரசாங்கம் பொதுநிலைப்பாட்டில் வந்தால்தான் செய்யும்.பொதுநிலைப்பாடு அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை.சமீபத்தில் சம்பிக்க ரணவக்க அரசியல்கைதி விடயத்தில் ஒரு பொதுவான யோசனையை முன்வைத்தார்.தமிழ் அரசியல்கைதிகளுக்கும்,படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனும் யோசனையை முன்வைத்தார்.அந்த யோசனையை நானும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.இருந்தாலும் அந்த யோசனையை ஆரம்பபுள்ளியாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அதைவிட்டிட்டு எடுத்த எடுப்பிலேயே தமிழ்தரப்பினால்,தமிழ்தேசிய கூட்டமைப்பினால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.இதுவும் துரதிர்ஷ்டமானது என நினைக்கின்றேன்.இருந்தாலும் தமிழர்களுக்குரிய அரசியல்தீர்வு விடயத்தை முழுமையாக நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.இருந்தாலும் அதனை ஆரம்பபுள்ளியாக பேசியிருக்கலாம்.நான் சம்பிக்க ரணவக்கையை சந்தித்து அரசியல்தீர்வு விடயமாக கேள்விகேட்டேன்.தமிழ் அரசியல்கைதி விடயத்திலும்,படைத்தரப்புக்கள் விடயத்திலும் சரி நீங்க யாரைக் சொல்கின்றீர்கள் என அவரிடம் கேள்வி கேட்டேன்.தனிப்பட்ட காரணத்துக்காக கொலைசெய்தவர்கள்,கொள்ளையடித்தவர்கள்,கப்பம் வாங்கியவர்கள்,கடத்திச் சென்றவர்கள் எல்லாம் எவ்வாறு விடுதலை செய்யலாம் என அவரிடம் கேட்டேன்.எனது தொகுதியிலே 11மாணவர்கள் கடத்தப்பட்டார்கள்.பிரபல்யமான வழக்கிலே படைத்தரப்புக்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.சம்பிக்க ரணவக்க அவர்கள் இல்லை இல்லை என்றும் அவர்கள் பற்றி நான் கூறவில்லை கூறினாரே.தனிப்பட்ட காரணத்துக்காக கொலை,கொள்ளை,செய்தவர்கள்,கப்பம் வாங்கியவர்கள்,கடத்தல்கள் செய்தவர்கள் எல்லாம் தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் ஊன கூறிவிட்டுச் சென்றார்.பொதுநிலைப்பாட்டிலும்,சம முன்னேற்றத்திலும்,வரப்பட்டுள்ளது.அரசியல்குற்றம் என்ன, தனிப்பட்டகுற்றம் என்ன என்று நாங்கள் ஆய்வு செய்யலாம்.எனவே அரசியல்கைதிகள் விடயத்தில் ஒரு ஆரம்பபுள்ளியாக வைத்து பேச்சுவார்த்தை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்க வேண்டும்.அரசியல்கைதி விடயத்தில் கலந்துரையாடல்கள்,பேச்சுவார்த்தைகள்,நடாத்தமல் எடுத்த எடுப்பிலே நாங்கள் சென்றால் தமிழர்களின் எதிர்காலம் சந்தேகத்கிடமானநிலையில் செல்லும்.

கேள்வி:-வடகிழக்கில் தங்களின் அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு அரசியல் தலையீடு காரணமாக தாமதிக்கப்படுகின்றதா என நீங்க நினைக்கின்றீர்களா?

பதில்:-இல்லை இல்லை அப்படியில்லை.வடக்கு கிழக்கிலே குறிப்பாக வடக்கிலே இருக்கின்றது.வடக்கிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சில முரண்பாடுகள் இருக்கின்றது.குறிப்பாக பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் மதிப்பிடு அறிக்கை கிடைக்காமல் வேலைகள் முடிவுறாமல் உள்ளது.ஒதுக்கப்பட்ட நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அந்தநிலையை மாற்றி புதிய திட்டங்களை வகுத்து அதனை முன்னெடுப்பதற்கு வேறு பிரதேச சபைகளுக்கு பணித்துள்ளேன்.இது என்னுடைய முரண்பாடு அல்ல.அது உள்வீட்டு பிரச்சனையாகும்.

கேள்வி:-கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் உங்கள் கட்சி போட்டியிடுவதாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கருத்து நிலவுகின்றது.இது உண்மையா?

பதில்:-வடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுவது பற்றி நாங்கள் இதுவரையும் எடுக்கவில்லை.மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு இருந்தால் வரும்போது பார்த்துக்கொள்வோம்.நீண்ட வீதியிலே பாதையிலே பயணிக்கின்றோம்.இன்னும் இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் நதி ஒன்று குறுக்காக பயணிக்கவுள்ளது என எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.அறியப்பட்டுள்ளது.நதியானது கரையை அடைந்தற்கு பிற்பாடுதான் நதியை எவ்வாறு கடப்பது பற்றி யோசிக்க வேண்டும்.பாலத்தில் செல்வதா? பாடையில் செல்வதா? நீந்திச் செல்வதாஅல்லது மந்திரம் போட்டு  நதியின்மீது கடந்து செல்வதா?   என்று அப்போது முடிவெடுப்போம்.அதற்கு அவசரப்படத்தேவையில்லை.

கேள்வி:-மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரதேச செயலகங்களுக்கு மட்டும் தங்களின் அமைச்சின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:-தட்டுங்கள் திறக்கப்படும்.கேளுங்கள் தரப்படும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தெந்த பிரதேச செயலங்களில் இருந்து தட்டப்படுகின்றதோ அல்லது கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் கொடுத்துள்ளேன்.நான் என்ன மந்திரவாதியா எங்கெல்லாம் பிரச்சனை இருக்கின்றது என்பதை அறிவதற்கு.கேட்டால்தான் தெரியும்.என்னை நாடினால்தான் தருவேன்.எந்தெந்த பிரதேச செயலங்களில் பிரச்சனை இருக்கின்றது? நிதி தேவையென்று அரசியல்வாதிகளிடம்,அரசியல் தலைவர்களிடம் சொல்லுங்கள்.கேட்கச் சொல்லுங்க கேட்டால் தருவேன்.

கேள்வி:- தங்களின் நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள், பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.இதுபற்றி என்ன சொல்லுகின்றீர்கள்?

பதில்:-எரிபொருள் சூத்திரம் நிதி அமைச்சருக்கே புரியவில்லை.நானும் ஊடகங்களின் மூலம் அறிந்துகொண்டேன்.நிதி அமைச்சருக்கே புரியவில்லை.எனக்கு எப்படி புரியும்.



SHARE

Author: verified_user

0 Comments: