மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்;ட் 09, 2016) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் அருகிலிருந்த
மின்கம்பத்துடன் பலமாக மோதியதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பக்கமிருந்து வாழைச்சேனை நோக்கி போய்க் கொண்டிருந்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி நொருங்கியதில் வாழைச்சேனை விபுலாநந்தபுரத்தைச் சேர்ந்த சின்னையா தருமராசா (வயது 56), இராஜேந்திரன் சுஜன் (வயது 16), அபேவர்தன ஜெயலெட்சுமி (வயது 69) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை வாகன போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment