9 Aug 2016

ஊவா மாகாணத்தில் பாதிக்கப்பட்ட எங்களது காணிகள் பௌத்த பிக்குவால் அபகரிகரிப்பு மட்டக்களப்பில் தோட்ட மக்கள் அவலம் வெளியீடு

SHARE
ஊவா மாகாணத்தில் பாதிக்கப்பட்ட எங்களது காணிகள் பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டிருப்பதோடு
மட்டக்களப்பி;ல் அகதியாக வந்த எமக்கு 33 வருடங்கள் கழிந்தும் வசிக்க வீடு கிடைக்கவில்லை. தோட்ட மக்கள் அவலம் வெளியீடு

“ஊவா மாகாணத்தில் இருந்து 1983 ஆடிக் கலவரத்தின்போது அடித்து விரட்டப்பட்டு சகலதையும் இழந்து பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்து மட்டக்களப்பு-பதுளை வீதிப் பகுதியில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வரும் எமக்கு வசிக்க இன்னும் ஒரு வீடு கட்டித் தரப்படவில்லை” என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மரப்பாலம் கிராமத்தில் வசிக்கும் இராமசுந்தரம் மகேஸ்வரி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 09, 2016) வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இதன்போது 1983 ஜுலை கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளைவீதிப் பகுதியில் வசிக்கும் ஊவா பெருந்தோட்டப் பகுதி  மக்கள்  செயலணிக்குழுவின் முன் ஆஜராகி தமது குறைபாடுகளை வெளியிட்டனர்.

தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட மகேஸ்வரி ஊவா பரணகம, வெலிமட பகுதியில் நாங்கள் சுமுகமாக வாழ்ந்துவரும்போதுதான் 1983 ஜுலைக் கலகம் ஏற்பட்டது.

நாங்கள் லயன் காம்பிராக்களில் வாழவில்லை. எங்களுக்கு 5 ஏக்கர் சொந்தக் காணிகள் இருந்தன. நாம் விரட்டியடிக்கப்படும்போது எமது காணி, வீடு, சொத்துக்கள் அத்தனையையும் அங்கிருந்த. நாங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என நம்பிய ஒரு பௌத்த பிக்குவிடம் ஒப்படைத்து விட்டுத்தான் வந்தோம்.

ஆனால் பின்னாட்களில் எமது அத்தனை சொத்துக்களும் அந்த பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டிருப்பதோடு நாம் அங்கு நிலைமை சுமுகமாகியதும் திரும்பிச் செல்ல முற்பட்டபோது “புலி”என முத்திரை குத்தப்பட்டோம்.
எங்களுக்கு அங்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. இங்கும் புனர்வாழ்வு கிடைக்கவில்லை.” என்றார்.

இந்த அமர்வில் மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழந்து வரும் மலையக மக்கள் தாம் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் பற்றியும் நல்லிணக்கப் பொறிமுறையில் தமது எதிர்பார்ப்புக்களையும் மகஜராகக் கையளித்தனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துவரும் மலையக தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சம உரிமையை அனுபவிக்கும் சமூக வாழ விரும்புகின்றோம். நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின் போது நாம் முகம் கொடுத்து வரும் ஒதுக்குதலை நீக்க ஆவன செய்யும்படி வேண்டுகின்றோம்.
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவின் பதுளைவீதிக் கிராமங்களில்  கூடுதலாக மலையகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடுகையில்   கல்வி, வேலைவாய்ப்பு,  மற்றும் சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி  நடவடிக்கையின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே நல்லிணக்க முயற்சியன் போது எமது சமூகம் சமவுரிமைப் பெற்று சுபீட்சமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக்கோருகின்றோம்.

1958 காலம்முதல்  தொடர்ச்சியாக இடம்பெற்ற இனக்கலவரங்களினால் பெரும் இழப்புகளுக்கு  முகம் கொடுத்து மலையக மக்கள் இம்மாவட்டதிற்கு  இடம்பெயர்ந்து கிராமங்களில் குடியமர்ந்து யுத்த காலத்தில் பாரிய உயிர், உடைமையிழப்புகளையும் சந்தித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (குசனையலஇ யுரப 12இ 2016) காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை இடம்பெறும்.

செயலணியின் மூன்றாவது அமர்வு சனிக்கிழமை (ளுயவரசனயலஇ யுரப 13இ 2016) மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில்  (னுநசடிய ர்யடட) காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரையும் இடம்பெறுகின்ற அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி (வுரநளனயலஇ யுரப 16இ 2016) காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: