4 Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயல்கள் கண்டிக்கதக்க வகையில் நடந்துவருகின்றன.

SHARE
கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வேண்டும், வடமாகாண சபைக்கு அதிகாரம் வேண்டும் என்று எல்லோரும் பேசி வருகின்றோம். பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி அடிக்கடி பேசுகின்றோம். இந்த அதிகாரங்கள், நல்ல முதலமைச்சராக இருக்கும் வரையே  சிறப்பாக இருக்கும்.
 என கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மயிலம்பாவெளி, காமாட்சி மாதிரிக் கிராமத்தில் வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுபுதன்கிழமை (01) காலை நடைபெற்றது.


வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் 29 வீடுகளைக் கொண்டதாக இந்த வீடமைப்புத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் தற்போது ஒரு வியாதி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரம் வேண்டும் என்ற தோரணையில் தலைக்கடித்து என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாத நிலவரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயல்கள் கண்டிக்கதக்க வகையில் நடந்துவருகின்றன.

இது இந்தப் பிராந்தியத்தில் அரசியல்வாதியாக இருப்பதன் காரணமாக வியப்பும் வேதனையுமாகவுள்ளது. அதிகாரம் கிழக்கு மாகாண சபைக்கு வேண்டுமா அல்லது முதலமைச்சருக்கு தேவைப்படுகின்றதா என்பதில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் மக்கள் மனங்களை வென்றுவந்த மாகாண முதலமைச்சர் கிடையாது.

மக்களை வென்ற அரசியல்வாதியென்றால் மற்ற அரசியல்வாதிகளைப்பற்றி அவருக்கு தெரிந்திருக்கும். மாகாணத்தின் அதிகாரங்கள் பற்றி அறிந்திருப்பார். ஆளுனருக்கு உள்ள அதிகாரம் பற்றி தெரிந்திருக்கும். அவரின் அதிகார எல்லை பற்றி அவருக்கு தெரிந்திருக்கும்.


கிழக்கு மாகாணத்தின் அரசியல் இயலாமையா, அரசியல் அறிவு இல்லாமையா என்னும் கேள்வியை நாங்கள் இங்கு எழுப்பவேண்டியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் எங்களின் நல்ல நண்பர்.இருந்தபோதிலும் அண்மைக்காலமாக அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இருந்து அவர் மாற்றமடைய வேண்டும் என்பது எமது பிரார்த்தனையாகும். அவசரப்படவேண்டாம்.அதிகாரம் என்பது இறைவன் தரும் விடயம். அதனை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும் பழிவாங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையினையும் அவரிடம் விடுக்கின்றேன் என்றார்.  
SHARE

Author: verified_user

0 Comments: