6 Sept 2015

சம்மந்தனின் தலைமையில் தமிழ் மக்களுகுரிய தீர்வைப் பெற்றெடுக்க வேண்டும் - அரியநேத்திரன்.

SHARE
ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட் பின்னர் ஆமிர்தலிங்கம் எதிர்க் கட்சியாகச் சென்றார் ஆனால் லெட்சக் கணகானவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சம்மந்தன் எதிர்க் கட்சித் தலைவராகச் சென்றுள்ளார்.  எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பதவிகளுக்காக நாடாளுமன்றம் செல்கின்றோமா, உரிமைக்காக நாடாளுமன்றம் செல்கின்றோமா என்பதையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர் காலத்தல் எடுத்துக் காட்டவிருக்கின்றது. 
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதவிகள் கிடைத்து தற்போது சில நாட்கள் மாத்திரம்தான், இன்னும் காலம் செல்லச் செல்லத்தான் எமது கூட்டமைப்பின் செயற்பாடுகள் வெளிப்படும். ஆகவே அனைவரும் இணைந்து சம்மந்தனின் எதிர்க் கட்சிப் பதவியனைப் பலப்படுத்தி சம்மந்தன் தலைமையில் தமிழ் மக்களுகுரிய தீர்ரைவப் பெற்றெடுக்க வேண்டும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
                                             
1990 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 158 தமிழர்களின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சனிக்கிழமை (05) மாலை மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர்மேலும் தெரிவிக்கையில். 

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறு மூலையில் 158 பேர் படுகொலை, அதே மாதம். 9 ஆம் திகதி சத்திருக்கொண்டான் படுகொலை, 21 ஆம் திகதி புதுக்குடியிருப்பு படுகொலை,  Nபுhன்றன இடம் பெற்றதோடு, காரைதீவிலிருந்து மட்டக்களப்பு வரை 1990 ஆம் ஆண்டு மிக மோசமான படுகொலைகள் இடம்பெற்றன. எனவே 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கொடூரமான மாதமாகப் பார்க்கப் படுகின்றது. 

கடந்த காலங்களில் நான் இரண்டு மறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பணி செய்தேன் ஆனால் தற்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லா விட்டாலும் தொடர்ந்து எனது அரசியல் பணியையும், சமூகப் பணியையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். 
கடந்த 77 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் சென்று எதிர்க் கட்சிப் பதவி பெற்றுக் கொண்டதற்கும் தற்போது இரா.சம்மந்தன் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று எதிர்க்கட்சிப் பதவி எடுத்துக் கொண்டதற்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. அமிர்தலிங்கம் எதிர்க் கட்சியாகச் சென்ற காலம் வேறு சம்மந்தன் எதிர்க் கட்சியாக சென்றுள்ள காலம் வேறு இதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப் புரிந்து  கொள்ளலாமல் தற்போது பலரும் பல விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றார்கள். 

தந்தை செல்வாவின் அகிம்மை ரீதியான போராட்டதின் பின்னர் கிடைத்த பதவிதான் அமிர்தலிங்கத்திற்குரிய எதிர்க்கட்சிப் பதவியாகும். புpரபாகரனின் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்துள்ளதுதான் சம்மந்தனின் எதிர் கட்சிப்பதவியாகும். 

77 ஆம் ஆண்டு காலப் பகுதயில், அமிர்தலிங்கம் தமிழ் மக்கள் எதிர் பார்த்த விடையங்களைக் கொண்டு செல்ல வில்லை சர்வதேசத்தை ஈர்த்து தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்வு கண்டு சாதனை புரிவார் அமிர்தலிங்கம்  என எதிர்பார்த்தோம் அனால் அவர் சாதிக்க வில்லை.

தற்போது, பிரபாகரனின் போராட்டம் 21 உலக நாடுகளின் சதிவலைகளினால் தோற்கடிக்கப் பட்டபின் தோன்றியிருக்கின்ற அரசியல் சூழலாகும். போராட்டத்தின் பின்னர் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெறுவதற்குரிய செயற்பாடுகள் தற்போது ஐ.நா. வரைச் சென்றுள்ளது. இந்நிலையில்தான் சம்மந்தனுக்கு எதிர்க் கட்சிப் பதவி கிடைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது அரசாங்கத்திற்குச் சார்பான குழுக்களின் பிரதித்தலைவர் பதவியும், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும், அரசாங்கம் கொடுத்திருக்கின்றது. 

எதிர்க் கட்சிப்பதவி என்பது கேட்டுப்பெற்றது ஒன்றல்ல, கேட்டுப் பெறுவது அமைச்சுப் பதவியாகும். தானாகாத் தேடிவந்த பதவிதான் சம்மந்தனுக்குக் கிடைதுள்ள எதிரக் கட்சிப் பதவியாகும்.

தற்போது கிடைத்திருக்கின்ற எதிர்க் கட்சிப் பதவியை வைத்துக் கொண்டு சம்மந்தன் எதைச் சாதிக்கப் போகின்றார் என்ற கேள்வி வந்து கொண்டிருக்கின்றது.  சம்மந்தன் எடுக்கின்ற தீர்மானங்கள் அனைத்தும் ஒரு இன விடுதலையை நோக்கியதாகவும், அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. 

இருந்த போதிலும் தற்போதைய நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்மந்தன் மிகவும் கடினமாக உழகைக்க கூடிய தேவை இருக்கின்றது. அந்த தேவையை இலங்கை அரசாங்கம் பூர்தி செய்யக்கூடிய வாய்ப்பு இல்லாவிட்டால், தொடர்ந்து எதிர்க் கட்சித்தலைவரும், பிரதிக்குழுக்களின் தலைவரும்,  அப்பதவிகளில், இருப்பது பிரயோசனம் இல்லை என நான் நினைக்கின்றேன். 

தமிழ் மக்கழிள் தீர்வுக்குரிய காலக்கெடுவை அரசாங்கத்திற்கு எதிர்க் கட்சித் தலைவரும், பிரதிக் குழுக்களின் தலைவரும், வழங்க வேண்டும். அரசு தமிழ் மக்களுக்குரிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்காத பட்சத்தில் இவர்களின் இருவரும் அவர்களுக்குக் கிடைத்துள்ள பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வருவாதர்கள் என்ற செய்த வரவேண்டும். இதனைத்தான் புலம் பெயர் மக்களும், சர்வதேசமும் எதிர்பார்து நிற்கின்றது.

ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட் பின்னர் ஆமிர்தலிங்கம் எதிர்க்கட்சியாகச் சென்றார் ஆனால் லெட்சக் கணகானவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சம்மந்தன் எதிர்க் கட்சித் தலைவராகச் சென்றுள்ளார்.  எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பதவிகளுக்காக நாடாளுமன்றம் செல்கின்றோமா, உரிமைக்காக நாடாளுமன்றம் செல்கின்றோமா என்பதையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர் காலத்தல் எடுத்துக் காட்டவிருக்கின்றது. 

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதவிகள் கிடைத்து தற்போது சில நாட்கள் மாத்திரம்தான், இன்னும் காலம் செல்லச் செல்லத்தான் எமது கூட்டமைப்பின் செயற்பாடுகள் வெளிப்படும். ஆகவே அனைவரும் இணைந்து சம்மந்தனின் எதிர்க் கட்சிப் பதவியனைப் பலப்படுத்தி சம்மந்தன் தலைமையில் தமிழ் மக்களுகுரிய தீர்ரைவப் பெற்றெடுக்க வேண்டும். என அவர் தெரிவர்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: