கடலில் கரையை அண்டியதாக காணப்படும் ஜெலிபிஸ் என்று அழைக்கப்படும் ஜெலி மீனகள் காரணமாக கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கரைவலை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச எல்லைக்கு உட்பட்ட குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையிலான கடலில் பல இடங்களில் இவ்வாறான ஜெலி மீன்கள் கூடுதலாக காணப்படுவதாகவும் கரைவலை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது கரைவலையூடாக மீன் பிடியினை மேற்கொள்ளும் போது இந்த ஜெலி மீன்கள், வலைகளில் சிக்கி ஏனையமீன்கள் பிடிபடுபதை தடுக்கின்றன. அதுமாத்திரமின்றி வலைகளில் கூடுதலாக ஜெலி மீன்கள், சிக்குகின்ற சந்தர்ப்பத்தில் வலையினை கடலில் இருந்து கரைக்கு வெளியேற்றுவதில் பாரிய சிக்கல் நிலவுகின்றது. சில வேளைகளில் வலையை வெட்டி வெளியேற்ற வேண்டிய நிலையும் ஏற்படுவதாக கரை வலை மீன்தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment