கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிகூடிய விருப்புவாக்குகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஞானமுத்து ஸ்ரீநேசனை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்
தலைவர் போன்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டம் - துறைநீலாவணைக் கிராமத்தின் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபையினர் சனிக்கிழமை (05) மாலை 5.00 மணியளவில் தீர்மானம் ஒன்றினை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர்.
இது தொடர்பாக எழுத்து மூல ஆவணம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஆயியோருக்கும், தொலைநகல் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பிவைத்துள்ளனர்.
துறைநீலாவணைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக் கூட்டம் மேற்படி ஆலய முன்றலில், சனிக்கிழமை மாலை நடைபெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப் பாட்டுள்ளது.
இதன்போது பொறியியலாளர் கேசு.பதிவிஜயரதன், சாமித்தம்பி சுந்தரலிங்கம், கண்ணகி அம்மன் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கி.விஜயகுமார், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைநீலாவணைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்..
இத்தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
மட்டக்களப்பு மாவட்டம் யுத்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். துறைநீலாவணை தொடக்கம் வெருகல் வரையும் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு இன்றைய நல்லாட்சிமிக்க அரசாங்கத்தில் இருக்கின்றது.
இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகள், மீனவர்கள், யுத்தத்தினால் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பத்தினர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள், போன்றவர்களின் இன்னல்களைத் துடைப்பது சாலச்சிறந்ததாகும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் ஒரு துளியேனும் அபிவிருத்தியினை மட்டக்களப்பு மாவட்ட வறியமக்களுக்கு வழங்கவில்லை. அவர்களுடைய பிரதேசமும் அவர்களுடைய ஆதரவாளர்களுடைய பிரதேசங்கள் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டன.
இந்த வகையில் பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழ் மக்களுடன் ஏனைய மக்களையும் இணைத்துக் கொண்டு அபிவிருத்தியை செய்வதற்கு வாண்மை மிக்கவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனே ஆவார்.
மாவட்ட நிதிஒதுக்கீடுகள் மூலம் அறிவு ரீதியான எண்ணங்களுக்கு மதிப்பளித்து கண்ணீர் சிந்திய மக்களுக்கு சேவை செய்யும் வல்லமை உடையவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேகசன் அவர்களே ஆவார்.
ஆசிரியராகவும், அதிபராகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் இருந்து கல்விப் பணிசெய்த அனுபவத்தை வைத்துக் கொண்டு அவருக்கு அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கினால் “மழைத்துளி கண்ட பயிர் வளர்ச்சிபோல்” மாவட்டத்தின் அபிவிருத்தி சிறப்பாக இருக்கும்.
எனவே கல்வித்தகைமை, நிருவாகத்திறமை, மும்மொழியாற்றல ; கொண்ட கல்விப் புலமையாளர நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப ;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment