தாயக ஊற்றின் ஏற்பாட்டில் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோருக்கு விசேட மருத்துவ
முகாம்.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையிலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் தாயக ஊற்று எனும் தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் வழிகாட்டலில், தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர் திருமதி சர்மி உதயகுமாரின் ஒருங்கிணைப்பில், மடக்களப்பு மாவடிவேம்பில் அமைந்துள்ள உயிரிழை நிலையத்தில் தங்கியிருக்கும் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோருக்கு விசேட மருத்துவ முகாம் திங்கட்கிழமை(23.11.2026) இடம்பெற்றது.
இதன்போது செங்கலடி குளோபல் தனியார் வைத்தியசாலை தாதியர் குழாத்தினரால் அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் வைத்திய ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், கா.நாகேந்திரன் செங்கலடி குளோபல் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி சர்மி உதயகுமார், தாயக ஊற்று அமைப்பின் நிருவாகத்தினர், தாதியர்கள், தாயக ஊற்று அமைப்பின் நிருவாகத்தினர். உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment