கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து
ஆலயங்களில் நெய் விளக்கேற்றி விசேட
வழிபாடுகள் முன்னெடுப்பு.
மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று செவ்வாய்கிழமை(24.11.2026) கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அடியார்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் ஆலய பிரதம குரு சபஸ்ரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடமபெற்றன.
ஆலயத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களால் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் வெற்றிலையை கழுவி அதற்கு திருநீறு சந்தனம் குங்குமம் தடவி அதற்கு மேல் நெய்விளக்கு வைத்து அதற்கும் மங்களப் பொருட்களை தடவி தீபங்களை ஒளி ஏற்றி முருகனுக்கு தீபாராதனை காட்டி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அடியார்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபபடுகளில் கலந்து கொண்டு மலர்தூவி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருக்கார்த்திகை தீப திருநாள்
முன்னிட்டு சகல முருகன் ஆலயங்களிலும் முருகப்பெருமானுக்கு விசேட வழிபாடுகள்
இடம்பெற்று இறை ஆசீர்வாதம் வேண்டி பக்த அடியார்கள் விரதம் இருந்து நெய்
விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment