நீரிழிவு நோய்க்கு ஆரம்பத்திலேயே
நடவடிக்கை எடும்போம் - களுவாஞ்சிகுடியில் விழிப்புணர்வு.
நீரிழிவு நோய்க்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடும்போம் எனனும் தொணிப் பொருளின்கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (23.11.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் க.புவநேந்திரநாதன் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் ஆரம்பித்த குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியூடாகச் சென்று எருவில், பட்டிருப்பு, பிரதான வீதியூடாகச் சென்று களுவாஞ்சிகுடி மணல் வீதியூடாகச் சென்று மீண்டும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கும் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி அதார வைத்தியாசலை நிருவாகத்தினர், களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அலுவலகத்தினர், நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஸ்ரீகாந், மயக்க மருந்து வைத்திய நிபுணர், மற்றும் ஏனை யவைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment