கட்டுரை : கால்நடை வளர்ப்பாளர்களை ஏமாற்றிய முன்னாள் ஜனாதிபதிகள்- இதுவரையில் 1550 கால்நடைகள் மரணம் மைலத்தமடு பண்ணையாளர்களின் ஏக்கம்.
தமிழ் வாழ்வில் கால்நடை வளர்ப்பு என்பது இன்றியமைதாததாகும். குறிப்பாக ஆடு, மாடு, கோழி, போன்றவற்றை குடும்பத்தோடு தமிழர்கள் வளர்த்து அதிலிருந்துவரும் வருமானத்தினூடாகவே அவர்களின் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்துள்ளனர்.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் கால்நடைகளை இன்றும் பட்டி பட்டியாக வளர்த்து வருகின்றார்கள். பசுக்கள் வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பாலினை விற்று பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம், உள்ளிட்ட அனைத்தையும் கவனித்து வரும் மக்கள் மட்டக்களப்பில் ஏராளம்.
எனினும் நாட்டின் பாற்பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் மட்டக்களப்பு பண்ணையாளர்களும் பெரும் பங்காற்றி வருகின்றார்கள். ஆனாலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கல்நடை வளர்ப்பாளர்கள் பன்நெடுங் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மைலத்தமடு, மாதவனை, ஆகிய பகுதிகளிலேயே தமது கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள்.
இலங்கையில் பீடித்திருந்த யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் அந்த மேச்சல்தரைப் பகுதிக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அம்பாறை, மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் அங்கு சட்டவிரோதமான முறையில் குடியேறி பண்ணையாளர்களின் மேச்சல்தரைப் பகுதியை ஆக்கிரமிப்பதுவும், புற்றரைகளை எரிப்பதும், கால்நடைகளை துப்பாக்கியால் சுடுவதுமாக செயற்பட்டு வருவதாக அப்பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பண்ணையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்….
மேச்சல்தரைப் பகுதியை விடுவிக்குமாறுகோரி கடந்த 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. வாழ்வாதாரத்துக்காகவும் எமது வாழ்வாதார உரிமைக்காகவும் நாம் இதுவரை காலமும் போராடி வருகின்றோம். எமக்காக வடக்கு கிழக்கிலே உள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த உறவுகள் எம்முடன் கைகோர்த்திருக்கிறார்கள். அதுபோல் வடக்கு மாகாணத்திலும் எமக்கான உரிமைக்காக வேண்டி அங்குள்ள மக்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
நாம் கேட்பதெல்லாம் எமது வாழ்வாதார உரிமையைதான். நாட்டின் ஜனாதிபதி மேச்சல் தரைக்குரிய நிலப்பகுதியாக மையிலத்தமடு மாதவனை நிலப்பகுதியை ஒதுக்கி தருவதாக 1750 ஏக்கர் நிலப் பகுதியை உடனடியாக விடுவிப்பு செய்து கொடுக்குமாறு பணிபுரி விடுத்திருந்தார். ஆனால் இன்னும் அதற்குரிய மகாவலி அதிகார சபையோ அல்லது துறைசார் அதிகாரிகளோ இதுவரை அதனை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. இன்னும் அப்பகுதியில் அத்துமீறிய பயிற் செய்கையாளர்களும் ஏனைய அத்துமீறிய செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறு அத்துமீறி எமது மேச்சல்தரை பகுதியில் குடியிருப்பவர்கள் அங்குள்ள வனப் பகுதிகளை அழித்தும் காடழிபுகள் நடவடிக்கைகளிலும், நில ஆக்கிரமிப்புக்களிலும், ஈடுபட்டு வருகின்றார்கள். எமது கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகின்றார்கள். எமது பிரச்சினைகள் தொடர்பிலும் எமது கால்நடைகளின் உயிர் சேதங்கள் தொடர்பிலும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தாலும் அதனுடைய பிரதிபலிப்பு ஒன்றுமில்லை.
அபிவிருத்திகுழு கூட்டங்களிலும்; எமது விடயங்கள் குறித்து விரிவாக விளக்கினாலும், எழுத்து மூலம் வழங்கினாலும், அவை அனைத்துக்கும் இதுவரையில் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. எமது கால்நடைகள் குளங்களுக்கு சென்று நீர் அருந்துகின்ற போது சுட்டு வீழ்த்துகின்றார்கள். இந்த நிலையில்தான் நாங்கள் வீதிக்கு இங்கி எமது வாழ்வாதார உரிமைக்காக போராடி வருகின்றோம்.
ஜனாதிபதியால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்பையாவது எமக்கு விடுவித்து தருமாறு நாம் ஜனாதிபதியிடம் உருக்கமான வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.
அப்பகுதியிலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி குடியேறி எமது மாடுகளை குறிவைப்பதும், எமது மாடுகளை சுடுவதும, காடழிப்புகளில் ஈடுபடுவதுமாகவேதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விடையங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தெரிவித்தும் இதுவரையில் எந்தவித பலனுமில்லை. பாராளுமன்றத்தில்கூட எமது விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தாலும் ஆனாலும் இதுவரையில் எதுவித பலனுமில்லை. இன்னும் எமது நிலப்பகுதி வர்த்தமானி அறிவித்தல் பிரகடனம் எடுக்கப்படவில்லை ஆரம்பத்தில் 3520 கெக்ரயர் ஏக்கர் வர்த்தமானி பிரகடனம் செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தற்போது ஜனாதிபதி 1750 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதாக தெரிவித்திருக்கின்றார். அதுகூட இன்னும் எமக்குக் கிடைக்காத இந்த நிலையில்தான் நாங்கள் 1000 நாட்களைக் கடந்து எமது வீதிக்கிறங்கிய போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
என மையிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் நிமலன் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்தார்.
இம்மக்களின் கோரிக்கைக்கு இதுவரையில் செவிசாய்க்காததது ஏன்? மக்களை வாழவைக்கும் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கும் காடையர்கள் என்றே கூறவேண்டும். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? ஏன இன்னமும் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்பது பண்ணையாளர்களின் மத்தியில் எழும் நியாயமான கேள்விகளாகும்.
எமது போராட்டம் தற்போது மூன்று வருடங்களை கடந்திருக்கின்றன. இந்த நிலையிலே எமது வாழ்வாதார பிரச்சனையை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. சகோதர சிங்கள மக்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்குகின்றன. இதனால் எங்களது கால்நடைகள் தினம தினம் தினம் அழிந்து கொண்டேதான் இருக்கின்றன. அதேபோல் அங்குள்ள புற்றரைகளையும் அழிக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில்தான் எமது மேச்சல்தரைக்குரிய நிலப்பகுதியை வர்த்தமானி பிரகடனம் செய்து தருமாறு கேட்கின்றோம் நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
மகாவலி வலயத்திக்குட்பட்ட 3525க்கு உட்பட்ட ஹெட்ரயர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. அதனை அவர்கள் 1750 ஏக்கர் நிலமாக மாற்றி அதனை விடுவிக்கின்றோம் என வாய்மொழியாக தெரிவித்து இருக்கின்றார்கள். அவ்வாறு தெரிவித்தாலும் இன்னும் அவை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவில்லை. அவ்வாறு வர்த்தமானி பிரகடனம் செய்தால்தான்; அத்துமறிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.
“பலதரப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மேச்சல் தரைப்குதிய நிலப்பகுதியை தருகின்றோம் என எம்மை ஏமாற்றிவிட்டுச் சென்றுள்ளார்கள்” அவர்கள் தான் எமது போராட்டத்தை இன்னும் வலுவடையச் செய்வதற்கு காரணமாகவும் இருந்தார்கள். இதனால் எமது வாழ்வாதார இன்னும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறன நிலைமை இன்னும் மேலும் தொடரும் பட்சத்தில் இன்னும் மென்மேலும் எமது பல கால்நடைகள் இறக்க நேரிடும். இதனால் பல கால்நடை பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் அற்குப்போகும் இதனை கருதிக் கொண்டு எமது மேய்ச்சல்தரையை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கிலே காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வேலையில் கிழக்கிலும் மயிலத்தமடு மாதவன் பிரதேசத்தில் எமது மேச்சல் தரையையும் அரசாங்கம் கபளிகரம் செய்கின்றதோ என எமக்கு சந்தேகம் வருகின்றது. எனவே மேச்சல் தரையை வர்த்தமானி பிரகடனம் செய்து ஒதுக்கீடு செய்து வருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். என மற்றுமொரு கால்நடை வளர்ப்பாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் மூன்று வருட மாக எனக்கு எந்த விதமான நீதியும் கிடைக்கவில்லை இதுவரையில் 1550 கால்நடைகள் இறந்திருக்கின்றன ஜனாதிபதி அவர்கள் வாய்மொழி மூலமாக 1750 ஏக்கர் ஒதுக்கி தருவதாக தெரிவித்து இருக்கின்றார். அது எனது கால்நடைகளின் வளர்ப்புக்கு போதாது மீதமாக உள்ள ஏனைய நிலப்பகுதியில் சேர்த்து வருத்தமானி பிரகடனம் செய்ய வேண்டும். இப்போதும் எனது கால்நடைகளை அழித்த வண்ணமேதான் இருக்கின்றன.
புற்றரைகளை எரிக்கின்றார்கள் இதனால் மாடுகளுக்கு உணவில்லை இதனால் பால் இல்லாமல் போகின்றது. எனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு நாம் சரியாக இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். மூன்று வருட காலமாகவே வீதியிலேயே நாங்கள் கொடகை அமைத்து போராடிக் கொண்டேதான் இருக்கின்றோம். இதுவரையும் எமக்கு எந்த நீதியும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு மேய்ச்சல் தரையைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவிக்கின்றார் கால்நடை வளர்பு பண்ணையாளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.
இது இவ்வாறு இருக்க காணிய இழந்த மக்களின் குரலாக தங்களுடைய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே கோசத்தோடு நீண்ட காலமாக போராடி வருகின்ற வடக்கு கிழக்கிலே மட்டக்களப்பு மாவட்டத்திலும் லைத்;தமடு, மாதவனை பிரதேசத்திலும், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிழவும் மக்கள் உள்ளிட்ட அனைவரும் மிக நீண்ட காலமாக நீதியானதும் நியாயம் நியாயமானதும் ஜனநாயகம் நிறைந்ததுமான போராட்டத்தை முன்னெடுத்து கொண்டு வருகின்றார்கள்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணி இழந்த மக்களுக்கான குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையிலும் காணி இழந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம்.
அந்த மக்களினுடைய போராட்டம் மிக மிக நியாயமானது. அவருடைய போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் முகமாக அவர்களிடமே அந்த காணிகளை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாம் கருத்துக்களும் முன்வைத்து வருகின்றோம். நீண்ட காலமாக மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பகுதிக்காக வேண்டி அந்த மக்கள் போராடி வருகின்றார்கள். 1000 நாட்களைக் கடந்தும் அவர்களுடைய போராட்டம் நகர்கின்ற இந்நிலையில் அந்த மக்கள் கேட்பதெல்லாம் அவர்களுடைய மேச்சல்தைரைப் பகுதியை மீட்டுத்தாருங்கள் என்றுதான்.
இந்த நாட்டினுடைய தேசிய வருமானம் பொருளாதாரத்தில் அவர்களும் ஒரு பங்குதாரர்கள் என்பதில் வலியுறுத்தி கேட்கின்றார்கள். இந்த நாட்டிலே பல்வேறு துன்பங்களை இன்னல்களையும் மிக நீண்ட காலமாக அந்த மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இது அரசினுடைய கடமை. அதற்காகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அதுக்காக இந்த மக்கள் வீதி ஓரங்களில் கொட்டகைகள் அமைத்து அவர்களுடைய தொழில் துறைகளை இழந்து போராடி வருகின்றார்கள்.
தங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு தட்டிக் கழித்ததோ! இந்நிலையில்தான் புதிய அரசாங்கமும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றதையிட்டு நாங்கள் கவலை அடைகின்றோம். ஜனாதிபதி எமக்கு மிக விரைவில் தீர்வை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் நாம் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
பல வருடங்களை கழிந்தும் நீதி கிடைக்காத மக்களாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் போராடி வருகின்றார்கள். எனவே மேச்சத்தரை நிலப்பகுதியை விடுவிக்க வேண்டும் வடக்கு கிழக்கிலே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என நாம் ஆணித்தரமான குரல்களை எழுப்பி வருகின்றோம்.
எனவே மக்களின் வாழ்வாதாரங்கள் சீராக முன்னெடுப்பதற்கு இந்த அரசாங்கம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என வாகிழக்கில் காணி உரிமைக்காக போராடி வரும் மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெவிக்கின்றார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பொரும் செல்வாக்குச் செலுத்துகிந்ற மட்டக்களப்புவாழ் கால்நடை வளர்ப்பாதளர்களை கடந்து சென்ற ஜனாதிபதிகள் ஏமாற்றியதுபோல் அல்லாமல் தற்போதைய புதிய ஜனாதிபதியும். புதிய அரசாங்கமும் மிகவிரைவில் அம்மக்கள் கோரும் மேச்சல் தரைப் பகுதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்து அம்மக்களும் சுய பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு வழிசமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும் என்பதுவே அனைவரினதும் பலத்த எதிர்பார்ப்பாகும்.
.jpeg)



.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

0 Comments:
Post a Comment