இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தெய்வீக ரத ஊர்வலம்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காரைதீவிலிருந்து கல்லடி வரையிலான தெய்வீக ரத ஊர்வலம் நேற்று சனிக்கிழமை (03.10.2026) ஆரம்பமாகி இன்றயதினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பைச் சென்றடைந்தது.
தெய்வீக ரத ஊர்வலத்திற்கு பெரியல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் வீதி ஓரங்களில் நிறைகுடம் வைத்து வரவேற்பதோடு, ஊர்வலத்தில் ஈடுபடுபடுபவர்களுக்கு மக்கள் சிற்றுண்டிகளையும். பானங்களையும் வழங்குகின்றனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தெடர்ந்து இராமகிருஷ்ணருக்குப் பூஜைகள் நடைபெற்றன.
இந்த புனித ரத ஊர்வலத்தில் மட்டக்களப்பு
கல்லடி இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி ஸ்ரீமத்
நீலமாதவானந்தா மகராஜ் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட
பலர் இணைந்துள்ளனர்.
இதன்போது மக்களுக்கு பிரசாதங்களும், இராமகிருஷ்ணர் தொடர்பான நூல்களும், வழங்கப்படுகின்றன.
சனிக்கிழமை இரவு குழுக்கள்மடம் ஆலயத்தில் தரிந்து நின்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பவனி ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனைச் சென்றடைந்தது.
இந்தப் புனித ரத ஊர்வலத்தில் பகவான் ஸ்ரீ
ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியர் மற்றும் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர்
ஆகியோரது உருவங்களைத் தாங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment