மண்முனை தென் எருவில்பற்றில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.
“திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த செய்த 'சிறுவர் கலை ஆற்றுகை அரங்கம்' நிகழ்வு வியாழக்கிழமை (01.10.2026) பாடசாலை அதிபர் இ.புவேந்திரகுமார் தலைமையில் சிவகலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதிகளாக பாடசாலை மாணவர்கள்; கலந்து கொண்டிருந்தனர். மேலும் இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கலை ஆற்றுகை நிகழ்வில் பாடசாலை மாணவர்களது நாடகம், நடனம், பாடல் மற்றும் கவிதை போன்ற பல நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வின் போது தேற்றாத்தீவு கிராமத்தில் நூறு வயதினை பூர்த்தி செய்த சிவகலை வித்தியாலய ஸ்தாபகர் கார்த்திகேசு இராசையர் கௌரவிக்கப்பட்;டார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment