18 Sept 2026

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு.

SHARE

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது.


வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் தழுவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தர்க்க ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒருமித்து பயணிப்பது தொடர்பிலும், மக்களுக்கான பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்டமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்த விடயத்தில் முயற்சிகள் மேற்கொள்வதெனவும், அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மலையக மக்களின் இருப்பு தொடர்பிலான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை கண்டறிதல், கல்வி விவசாய நடவடிக்கைளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களைக் கையாள்வதன் ஊடாக அரசியல் இருப்பு தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: