கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா வெள்ளிக்கிழமை (18.09.2026) நடைபெற்றது.
வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜைகள், கிரியைகள், என்பன இடம் பெற்றன.
ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ தேவராசா குருக்கள் தலைமையில் சுப முருந்த்த வேளையில் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தின் விசேட திருவிழாக்களான எதிர்வரும் 25 ஆம் திகதி திருவேட்டை திருவிழாவும், 29 ஆம் தேதி மாம்பழ திருவிழாவும், இடம்பெற்று 30 ஆம் திகதி தீர்த்த திருவிழாவும், 01.10.2026 அன்று பூங்காவனத்திருவிழாவும் இடம்பெற்று இறுதியாக வைரவர் பூஜை உடன் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடைய உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு தினசரி நண்பகல் அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி, வலி வீதி வலம் வருதல் இடம்பெற உள்ளன.
இந்நிலையில் இன்றைய கொடியேற்ற திருவிழாவிற்க மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெரும் அளவிலான முருக பக்த அடியார்கள் கலந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.












0 Comments:
Post a Comment