கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் என
போற்றப்படும் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்.
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த உற்சவம் வியாழக்கிழமை(30.07.2026) ஆயிரக்கணக்கான முருக பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்பு ஆலய முன்றலிலே அமைந்துள்ள தீர்த்தக் கேனியில் நாதஸ்வர மேளங்கள் தாளங்கள் முழங்க தீர்த்தத் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு செல்ல முடியாத முருக பக்தஅடியார்கள் சின்னக் கதிர்காமம் அழைக்கப்படும் இந்த தாந்தாமலை முருகன ஆலயத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது ஒரு பண்டைய மரபாக இருந்து வருகின்றது.
உற்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்றன.
கடந்த 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகிய இவ்ஆலய வருடாந்த திருவிழா சுவாமி உள்விதி வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்று வியாழக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக்
குளத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் இவ்வருடத்திற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றுள்ளது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment