30 Jul 2026

மட்டு நகரில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்த வடிகான்கள்.

SHARE

மட்டு நகரில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்த வடிகான்கள்.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் டெங்கு  குடம்பிகள் அதிகமாக காணப்பட்ட பொது சுகாதாரப் பகுதிகளை இலக்கு வைத்து மட்டக்களப்பு மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஆகியன இணைந்து இந்த துப்பதவு செய்யும் பணியை வியாழக்கிழமை(30.07.2026) முன்னெடுத்தன. 

இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த துப்புரவுப்பணி பிரதான வீதியில் உள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தப்பட்டன. 

கடந்த காலத்தில் வீதி அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் வடிகான் துப்புரவு பணிகள் ஒழுங்காக சீரமைக்கப்படாமையினால் வெள்ள அனர்த்த காலங்களின் போது பொதுமக்கள் பலத்த சிரமங்களை எதிர்கொள்வதுடன், டெங்கு நோய் பரவலுக்கும் அஇவை காரணமாக அமைந்துள்ளன. 

பொதுமக்களின் வேண்டுகோளின் பெயரில் பிரஜா சக்தி உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினருமான ரு.உதயராஜ் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

வடிகான் கட்டமைப்புகள், பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி அடைப்பெடுத்து காணப்பட்டிருந்தன. வீதி அபிவிருத்தி பணியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தனர். 

இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரப்பும் நுளம்பு குடம்பிகள். பரவாமல் இருப்பது தடுக்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாநகர சபையின் உயரதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் இந்த சிரமதான பணியில் இணைந்து இருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: