23 Jul 2026

76 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

76  இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 76 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(23.07.2026) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதே சபை உறுப்பினர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 375 இற்கு மேற்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது இடியப்பம் செய்யும் உபரணங்கள், தேங்காய் துருவும் இயந்திரம், அரிசி அரைக்கும் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதரப் பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. 

நம்மை நாமே ஆளவேண்டும்  அதற்காக வேண்டி வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் எந்தவித ஏனைய கட்சிகளின் கூட்டிணைவும் இல்லாமல் வடக்கிலும், கிழக்கிலும் முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றும்.

கிழக்கு மாகாணத்தில் சிறந்த கல்வியலாளரரான நமது மக்களின் பிரச்சனைகளை வெளிநாடுகளுக்குகச் சொல்லக் கூடிய ஒருவரை நாம் மட்டக்களப்பிலிருந்து முதலமைச்சராக உருவாக்க வேண்டும். நிட்சயமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முதலமைச்சராக வருவார். அதற்காக வேண்டி எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். 

நாம் நாட்டுக்காக போராடியவர்கள், வீதி அபிவிருத்தி செய்வது, வீடுகள் அமைத்துக் கொடுப்பது எல்லாம் ஒரு பொருட்டு அல்ல மாறாக எமது பிள்ளைகளை சிறந்த முறையில் கல்வி வழங்கி ஏற்கனவே இருந்தது போன்று இணைந்த வடகிழக்கிலே தமிழ் உணர்வுடன் செயற்பட வேண்டும். அதற்காக வேண்டி வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் எமது பலத்த நிரூபிக்க வேண்டும். என இதக்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: