21 Sept 2026

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்.

SHARE

 

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்.

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு லண்டனில் மன்சஸ்ரர் நகரில் முன்னெடுப்ப 

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன. 

தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். 

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், பிரித்தானியா முழுவதும் “12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள் என்ற அடிப்படையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தச் செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு திங்கட்கிழமை (20.09.2026) லண்டனில் உள்ள ஆயnஉhநளவநச  பகுதியில் இடம்பெற்றது. 

06வது நாள் கருப்பொருளாக, “இலங்கை அரசின் இனவழிப்பு திட்டமும் திவிடமடையும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பிரச்சனையும் என்ற தலைப்பு முன்னிறுத்தப்பட்டது.

 தியாக தீபம் திலீபன் அவர்களின் 12 நாள் உண்ணாவிரதப் போராட்டம் வரை தொடரும் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றையும் அதன் படிப்பினைகளையும் புதிய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

காலை 10 மணி முதல் பிற்பகல் வரை ஆயnஉhநளவநச பகுதியில்  அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது 

நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், தாயக விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களை மனதில் நிறுத்தி, அக வணக்கத்துடன் போராட்டத்தை ஆரம்பித்தனர். 

தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழ் ஈழஅரசாங்கத்தின் உறுப்பினரான கோபாலன் பிரசாத் அவர்களால் மலர்மாலை அணிவித்து, உதயநிஷா அவர்களால் ஈகை சுடர்ஏற்றிய பின்னர் கலந்து கொண்டவர்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன. 

இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாகம் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

1987ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் 39 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை என இதன்போது கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும், பதாகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் வரலாறும் உரிமைக் கோரிக்கைகளும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.






 

SHARE

Author: verified_user

0 Comments: