மட்டுநகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில்
வைத்தியசாலையில் அனுமதி.
ஒரு சில சாரதிகளின் அசமந்த போக்கினால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தவண்ணமேயுள்ளன. இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை(02.06.2026) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மேத்தியதால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் சாரதியின் அசமந்த போக்கினால் விபத்து இடம் பெற்றதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனது தாயுடன் முன்பள்ளிக்கு சென்ற சிறுமி ஒருவரே இவ்விபத்து சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான தாயும் மகளும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் விபத்துக்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment