15 May 2026

குருக்கள்மடம் மனிதப்புதைகுளி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto telluric audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி.

SHARE

குருக்கள்மடம் மனிதப்புதைகுளி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto telluric audio frequency  என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி. 

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை வியாழக்கிழமை(14.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமூகமளித்திருந்தனர்.

அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு பல விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நிலையில் சடுதியாக மழை குறிப்பிட்டதன் நிமித்தம் கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் குறித்த வழக்கு; வெள்ளிக்கிழமை(15.05.2026) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது. 

அந்த வகையில்; அப்பகுதியில் Magneto telluric audio frequency  என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு மன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி கட்டளை ஆக்கி இருக்கின்து. 

இந்த அடிப்படையிலே பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க இருக்கின்றார்கள். 

குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர் வருகின்ற திங்கட்கிழமை மன்றிலே அழைக்கப்பட இருக்கின்றது. என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான நான் சட்டத்தரணி  முபாறக் முஅஸ்ஸம் இதன்போது தெரிவித்தார்.











 

SHARE

Author: verified_user

0 Comments: