மக்களிடையே ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்பாடு.
2026 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி நிதியின் கீழ், இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்ற ஊட்டச்சத்து மிக்க உள்நாட்டு கால்நடைகள் சார்ந்த உணவுப் பொருட்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவித்து பிரபலப்படுத்தும் செயற்றிட்டம் தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு வெள்ளிக்கிழமை(08.05.2026) கிழக்கு மாகாண விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி அரச கால்நடை வைத்தியசாலையினால் களுதாவளையில் மக்களுக்கு இலவசமாக பசும்பால் காய்ச்சி பருகுவதற்கு அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்தல், மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிருக சார்ந்த உணவுகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இச்செயற்பாடு அமைவதாக களுவாஞ்சிகுடி அரச கால்நடை வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதன்போது களுவாஞ்சிகுடி அரச கால்நடை வைத்தி அதிகாரி, கல்நடை அபிவிருத்திப் போதனாசிரியர், அப்பகுதி சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment