மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டமட்ட
விளையாட்டு விழா.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தின் கோட்டமட்ட விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வு சனிக்கிழமை(09.05.2026)மாலை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் கல்வி நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன், கல்வி முகாமைத்துவத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.திருச்செல்வம், உடற்கல்விப் ஆசிரியர் ஆலோசகர் எஸ்.அரியதாஸ், உடற்கல்விப் பாடத்துறைக்கான வளவாளர் எஸ்.சிறிமுருகன், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், என பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கிடையில் அஞ்சல் ஓட்டம், பாடசாலைகளின் அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி என்பன இடம்பெற்றதோடு, மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன..
விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கும்
வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டனர்.












0 Comments:
Post a Comment