உலக நன்மைக்காக வேண்டி சித்தர்களின் குரல் அமைப்பினால் புனித கபில்வன முருகன்
ஆலய யாத்திரையும் வன பூஜையும்.
மொனாராகலை மாவட்டத்தில் பெருங்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித கபில்வத்தை முருகன் ஆலயத்திற்கான பக்தர்களின் வருடாந்த புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இரவுடன் நிறைவுற்றிருந்தது.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருங்காட்டுப் பகுதியில் குமுக்கன் ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த புனித தலம், கற்பக விருட்சம் என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றைச் சுற்றி அமைந்துள்ளது.
அந்த இடம் முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகளும், முனிகளும் தவம்செய்த இடமாகவும், அந்த இடம் அமைந்துள்ளதாக இது பல வரலாற்று இதிகாச புராணங்களுடனும், மகாவம்சங்களுடனும் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது.
இப்புனித பயணத்தில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் உலக நன்மைக்காக வேண்டியும் யாகங்களும் சித்த யகாமும், நாத ஒலியில் முருக வழிபாடும், சத்ரு சங்கார யாகமும், வேல் பூஜை, கபில வன பூஜை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் 21 நாட்கள் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து இப்புனித பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இந்த ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.















0 Comments:
Post a Comment