மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில்
முன்நெடுக்கப்பட்ட போதை ஒழிப்பு செயற்பாடு.
அரசாங்கத்தால் தற்போது நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்ற போதை ஒழிப்பு செயற்பாட்டின் மற்றுமொருகட்டம் இன்று திங்கட்கிழமை(27.04.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மருந்ததங்களின் உரிமையாளர்களை உவிப்பூட்டும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் மட்டக்களப:பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 7 மருந்தகங்களிலும் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் மேற்பார்வை சுபாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச போதை ஒழிப்பு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் பொலிசார் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது விழிப்பூட்டும் ஸ்ரிக்கர்கள் மருந்தகங்களில் ஒட்டப்பட்டு மருந்தக உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment