குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணால
சூழலில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு இனிமேல்
வழக்குதாக்கல் செய்யப்படும்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயம் ஈரநிலப்பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், அப்பறவைகள் சரணாலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் பயணிப்பவர்கள் குப்பைகளையும், கழிவுகளையும், மூட்டை மூட்டையாக அக்குறித்த பிரதேசத்தில் கொண்டு வீசிவிட்டுச் செல்வதனால் அச்சரணாலயத்திலுள்ள பறவைகளுக்கும், அச்சூழலுக்கும் பலத்த துர்நாற்றத்தினால் பலத்த பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் வீதியினால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வரல்கள் தெரிவிக்கின்றனர்.
பலர் வாகனங்களில் வந்து குப்பைகளை இடும் சந்தர்ப்பங்களில் அவர்களை கையும் மெய்யுமாகவும் மக்கள் பிடித்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் அப்பகுதிக்கு சென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் நிலமையை பார்வையிட்டுள்ளார். அவரிடம் குருக்கள்மடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அப்பகுதியில் கண்காணிப்புக் கமரா பொருத்தி அவதானித்து இவ்வாறு தொடர்ச்சியாக குப்பைகள் வீசும் சந்தர்ப்பங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
.jpeg)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment