12 Apr 2026

களுவாஞ்சிகுடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்.

SHARE

களுவாஞ்சிகுடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்.

புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர் மற்றும், பொதுச் சந்தை பகுதியில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்று ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) அவதானிக்க முடிந்தது. 

அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், கொள்வனவு செய்வதை காண முடிந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான்கரைப் பிரதேசத்தையுமும், எழுவாங் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிகுடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து மற்றும் தனியார் போரூந்துகளும் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து படுவாங்கரைப் பகுதிக்கான விசேட போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளதையும் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகின்றது.



























SHARE

Author: verified_user

0 Comments: