மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய
பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்.
கிலக்கிலங்கையின் மிக பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று திங்கட்கிழமை(19.04.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 18.04.2026 அன்று காலை 7 மணி தொடக்கம் 19.04.226 அன்று மாலை 4 மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாரத் தெய்வங்களுக்கும் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு பானந்துறை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் பிரதம குரு கிரியாகிரம ஜோதி பிரம்ம ஸ்ரீ இ.ஜெகதீச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களால் கும்பாபிசேகம் கிரியைகள் நடாத்தப்பட்டன.
திங்கட்கிழமை காலை விநாயகர் வழிபாடுகளுடன் புண்ணியாவாசனம் கிரியைகள் வேத உபசாரங்கள் ஆரம்பமாக பிரதான கும்ப பூஜை, விசேட யாக பூஜைகள, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலஸ்தான மூர்த்திக்கும், ஆலய பரிபாரத் தெய்வங்களுக்கும், பக்தி பூர்வமாக வானத்தில் கருடர்கள் வட்டமிட கும்பாபிசேகம் இடம்பெற்றது.
இதன்போது ஆலயத்தில் தசமங்கல தரிசனம் இடம் பெற்று கும்பாபிசேக சிவாச்சாரியர்களினால் ஆசியும் வழங்கப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment