தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலய
வருடாந்த சங்காபிஷேகமும், பாற்குடபவனியும்.
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருச்சடங்கை முன்னிட்டு, பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் பக்தி பூர்வமாக, இன்று வியாழக்கிழமை(26.03.206) நடைபெற்றது.
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி பக்தர்களால் எடுத்து வரப்பட்டு தேற்றாத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள வட பத்திர காளிக்கு பாலபிஷேகம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள்
ஆரம்பமாகி சுவாமி உள் வீதி உலா வந்து, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.


0 Comments:
Post a Comment