கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (2026.03.23) இடம்பெற்றது.
புகலிடம் நிறுவனத்தின் அனுசரணையில் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள், பாடசாலை பிரதிநிதிகள், பொலிஸ் நிலைய உத்தியோத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ மாது, விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வளவாளராக மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ் கலந்து கொண்டு பயிற்சியை வழங்கியிருந்தார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment